ETV Bharat / state

அனுமதி பெறாமல் கட்டப்படும் கட்டடங்களுக்குச் சீல் - சென்னை மாநகராட்சி உத்தரவு! - மாநகராட்சி

பெறப்பட்ட கட்டட அனுமதிக்குப் புறம்பாக கட்டப்படும் கட்டடங்கள் மற்றும் அனுமதி பெறாமல் கட்டப்படும் கட்டடங்களுக்குச் சீல் வைக்க மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.

அனுமதி பெறாமல் கட்டப்படும் கட்டடங்களுக்கு சீல் - மாநகராட்சி உத்தரவு

author img

By

Published : May 9, 2022, 9:59 PM IST

சென்னை: சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பெறப்பட்ட கட்டட அனுமதிக்குப் புறம்பாக கட்டப்படும் கட்டடங்கள் மற்றும் அனுமதி பெறாமல் கட்டப்படும் கட்டடங்களின் மீது தமிழ்நாடு நகர் மற்றும் ஊரமைப்புச் சட்டம் 1971இன்படி (Tamil Nadu Town and Country Planning Act 1971) நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட வார்டின் உதவி பொறியாளர் அல்லது இளநிலை பொறியாளர், பகுதி உதவி செயற்பொறியாளர், மண்டல செயற்பொறியாளர்களுக்கு ஏற்கெனவே மாநகராட்சி உத்தரவிடப்பட்டுள்ளது.

குறிப்பாக, சம்பந்தப்பட்ட பொறியாளர்கள் தங்கள் பகுதிகளில் கட்டுமானப் பணி நடைபெறும் இடங்களுக்குச் சென்று கண்டிப்பாக ஆய்வு செய்து கட்டட அனுமதி உள்ளதா..? எனவும், அனுமதிப்படி கட்டுமானம் நடைபெறுகிறதா..? என்பதையும் கண்காணிக்க வேண்டும் எனவும் அவ்வாறு மேற்கொள்ளப்படும் கள ஆய்வின்போது கட்டட அனுமதி இல்லாத கட்டடங்கள் மற்றும் அனுமதிக்கு புறம்பாக கட்டுமானம் நடைபெறும் கட்டடங்களின் கட்டுமானப்பணியை அடித்தள கட்டுமான நிலையிலேயே (Plinth Level) நிறுத்த நோட்டீஸ் வழங்கவும், நோட்டீஸ் வழங்கப்பட்ட காலக்கெடுவிற்கு பிறகும் கட்டுமானத்தில் திருத்தம் மேற்கொள்ளாத கட்டடங்களுக்குப் பூட்டி சீல் வைக்க நோட்டீஸ் வழங்கவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், அனுமதி பெறாத மற்றும் அனுமதிக்குப் புறம்பாக கட்டப்பட்டு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறையில் மேல்முறையீடு செய்யப்பட்டு, அங்கு நிராகரிக்கப்பட்ட கட்டடங்களில் உயர் நீதிமன்ற உத்தரவின்படி, சம்பந்தப்பட்ட கட்டடத்தைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும் வகையில் ஜன்னல், கதவுகள் மற்றும் கழிவறை குழாய்கள் போன்றவற்றை அகற்றவும், மின் இணைப்பைத் துண்டிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளன.

கடந்த 15 நாட்களில் மாநகராட்சி அலுவலர்கள் மேற்கொண்ட கள ஆய்வில் அனுமதிக்குப் புறம்பாக கட்டுமானம் நடைபெற்ற 467 கட்டுமான இடங்களுக்குக் கட்டுமானப் பணிகளை நிறுத்த நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. இதில் முதற்கட்டமாக 66 கட்டுமான இடங்களுக்குப் பூட்டி சீல் வைக்க நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது என சென்னை மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: 'தமிழ்நாட்டுல இருக்குற பாதி நீதிமன்றங்கள் நீரில் தான் கட்டப்பட்டுள்ளன' - சீமான்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.