ETV Bharat / state

மத்திய அமைச்சரவையில் இடமில்லை... சோகத்தில் ஓபிஎஸ்; குஷியில் ஈபிஎஸ்! - edappadi palanisamy

சென்னை: மத்திய அமைச்சரவையில் இடம் கிடைக்காததால் ஓபிஎஸ் தரப்பு சோகத்தில் மூழ்கியிருக்கும் நிலையில், இதை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த மனநிலையில் ஈபிஎஸ் தரப்பு படுகுஷியாக இருந்து வருகிறது.

ops
author img

By

Published : Jun 1, 2019, 9:27 PM IST

நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய அளவில் மாபெரும் வெற்றிபெற்று ஆட்சி அரியணையில் மீண்டும் பாஜகவே அமர்ந்துள்ளது. தமிழ்நாட்டில் அதிமுக தலைமையில் பாமக, தேமுதிக, தமாகா உள்ளிட்ட கட்சிகளை உள்ளடக்கி இவர்கள் அமைத்த மெகா கூட்டணி படுதோல்வியை சந்தித்துள்ளது. அதிமுக மட்டும் 20 தொகுதிகளில் போட்டியிட்ட நிலையில், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ஓ.பி. ரவீந்திரநாத் குமார் ஒருவர் மட்டுமே வெற்றி பெற்றார். எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் மூத்தத் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவனை 76,693 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தது மட்டுமின்றி, பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அமமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வனை படுதோல்வி அடைய செய்ததும் ரவீந்திரநாத்துக்கு கூடுதல் சிறப்பாக அமைந்தது.

ஓ.பி.ஆர்
ஓ.பி. ரவீந்திரநாத்

கடந்த முறை நடந்த தேர்தலில் அதிமுக தனித்து போட்டியிட்டு 37 இடங்களை வென்றாலும் ஒரு மத்திய அமைச்சர் பதவியை கூட பெறவில்லை. ஆனால் இம்முறை பாஜகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்திருப்பதால் எப்படியும் அமைச்சரவையில் இடம்பிடித்து விடலாம் என்ற மனக்கணக்கில் அதிமுக இருந்தது. குறிப்பாக அதிமுகவில் இருந்து வெற்றிபெற்ற ஒரே எம்.பி என்பதால் நிச்சயம் மத்திய அமைச்சர் ஆகிவிடலாம் என்று ஓ.பி.ஆர் ஆதரவாளர்கள் காலரைத் தூக்கிக்கொண்டு வலம் வரத் தொடங்கினர். இதற்கெல்லாம் ஒரு படி மேலாக தேனி பகுதியில் நடக்கும் விழாவில் அவரை சிறப்பு அழைப்பாளராக போட்டு, அழைப்பிதழில் அவரது பெயருக்கு பின்னால் மத்திய அமைச்சர் என்று பதிவிடவும் அவரது ஆதரவாளர்கள் தவறவில்லை.

குடும்பத்துடன் ஜெ. விடம் ஆசி பெற்ற ஓபிஎஸ்

மேலும், தனது மகன் மத்திய அமைச்சரவையில் இடம்பெற்று விட்டால் 'மேலிடத்தில்' நெருக்கமாகலாம் என பன்னீரும் கணக்கு போட்டு வைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகின. இதற்கு செக் வைக்க நினைத்த முதலமைச்சர் ஈபிஎஸ், தனக்கு வேண்டியவரும் ஓ.பி.எஸ் சமுதாயத்தைச் சேர்ந்தவருமான முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்தை மத்திய அமைச்சராக்க அதிமுக முக்கிய உறுப்பினர்களிடம் கையெழுத்து வாங்கினார். தனது மகனை அமைச்சராக்கலாம் என்று எண்ணியிருந்த பன்னீர் மட்டும் அதில் கையெழுத்து போடவில்லை என்று கூறப்படுகிறது. இவ்வாறு இருதரப்புக்கிடையேயும் சத்தமில்லாமல் பனிப்போர் நடந்து வந்தது.

இந்நிலையில், டெல்லியில் நடந்த மோடி பதவியேற்பு விழாவில் கலந்துகொள்வதற்காக முதலமைச்சர், துணை முதலமைச்சர், எம்.பி ரவீந்திரநாத், அமைச்சர்கள் உள்ளிட்டோர் டெலல்லியில் முகாமிட்டனர். பதவியேற்புக்கு முன்பாக மாலை 4:30 மணியளவில் அமைச்சராக பதவியற்கவுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பிரதமர் மோடி தேநீர் விருந்தளித்தார். இந்த விருந்துக்கு ரவீந்திரநாத் அல்லது வைத்திலிங்கத்துக்கு அழைப்பு வரும் என்று எண்ணியிருந்த அதிமுக தலைமைகளுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. கடைசிவரை அதிமுக தரப்பிற்கு பிரதமர் அலுவலகத்தில் இருந்து எவ்வித அழைப்பும் வரவில்லை. இரவு ஏழு மணியளவில் வெளியான அமைச்சர்களாக பதவியேற்கவுள்ள எம்.பிக்களின் பட்டியலில் இருவரது பெயர்களும் இடம்பெறாததைக் கண்டு அதிமுகவினர் திடுக்கிட்டனர்.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

இதனை முன்னரே எதிர்பார்த்து காத்திருந்தது போல், அமைச்சரவை பதவியேற்பு விழாவை முடித்துக்கொண்டு ஈபிஎஸ் தரப்பு சத்தமில்லாமல் தமிழகம் திரும்பியுள்ளது. ஒருவேளை ரவீந்திரநாத் அமைச்சராகிவிட்டால் கட்சிக்கும் உள்ளேயும், வெளியேயும் பன்னீர்செல்வத்தின் கை ஓங்கிவிடும் என்பதாலேயே பழனிசாமி தரப்பின் இந்த குஷி மனப்பான்மைக்கு காரணம் என்கின்றனர் அவருக்கு நெருக்கமானவர்கள். ஆனால், தனது ராஜதந்திரங்கள் அனைத்தும் வீணாகிவிட்டதே என்ற விரக்தியில் ஓபிஎஸ் தரப்பு கடும் அப்செட்டில் இருக்கிறாராம். எனவே, மனம் தளராமல் டெல்லியிலே இருந்து வேண்டியவர்களை பார்த்து பேசி மகனை அமைச்சராக்கிவிட்டு தான் தாயகம் திரும்புவது என்று ஓபிஎஸ் தரப்பு காய் நகர்த்தி வருகிறதாம். ஆனால், மத்திய அமைச்சரவையில் 81 பேர் வரை இருக்கலாம் என்பதால் வரும் காலங்களில் ரவீந்திரநாத்துக்கு அமைச்சர் பதவி கிடடைக்க வாய்ப்புள்ளது என்று ஓபிஎஸ் அண்ட் கோவை பாஜக தரப்பு சமாதானப்படுத்தியிருப்பதாக கூறப்படுகிறது.

ஓபிஎஸ் - ஈபிஎஸ்
ஓபிஎஸ் - ஈபிஎஸ்

ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்துக்கு மத்திய அமைச்சர் பதவி கிடைக்குமா அல்லது தமிழ்நாட்டில் கிடைத்த தோல்வியால் ஏற்பட்ட கோபத்தால் அதிமுக இல்லாத மத்திய அமைச்சரவையை தொடருமா என்பது போக போகத் தான் தெரியும்.

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.