சென்னை: வடகிழக்குப் பருவமழை தீவிரம் அடைந்த நிலையில் தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்துவருகிறது. மாநிலம் முழுவதும் கடந்த ஒருவார காலமாக கனமழை (heavy rain) பெய்துவருவதால், பொதுமக்களின் இயல்புவாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து பெய்துவரும் கனமழை காரணமாக ஆறுகள், கால்வாய்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்நிலையில், அடுத்த ஐந்து நாள்களுக்குக் கனமழை தொடரும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கைவிடுத்துள்ளது.
பள்ளிகளுக்கு மட்டும்
மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகப் பல்வேறு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுவருகிறது. அந்தவகையில் இன்று (நவம்பர் 20) செங்கல்பட்டு, கடலூர், திருவண்ணாமலை, திருவள்ளூர் ஆகிய நான்கு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் (School Leave) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளி, கல்லூரிகளுக்கு
காஞ்சிபுரம், திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய ஆறு மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை (school, college leave) அறிவித்து, சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
இதையும் படிங்க : 35 ஆயிரம் கன அடி நீர் திறப்பு - வெள்ள அபாய எச்சரிக்கை