தமிழ்நாட்டில் பள்ளிக்கல்வித்துறையில் இடைநிலை, பட்டதாரி, முதுகலை ஆசிரியர்கள் பணியிடங்களில் 13,331 பேர் நியமனம் செய்யப்பட உள்ளனர். இவர்களுக்கு மதிப்பூதியம் மட்டும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு பல்வேறு தரப்பினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து , தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு பொதுச்செயலாளர் பேட்ரிக் ரைமண்ட் கூறுகையில், ’தொகுப்பூதியம், மதிப்பூதியத்திற்கு எதிராகப் பேசி வந்த திமுக முற்றிலும் இது போன்ற நியமனங்களை ஒழிக்க வேண்டும் என தேர்தல் அறிக்கையில் தெரிவித்து இருந்தது.
ஆனால், தற்போது ஆட்சியில் இருக்கும்போது சில அலுவலர்கள் பேச்சைக் கேட்டு தொகுப்பூதியத்தில் மிக மிக குறைந்த ஊதியத்தில் ஆசிரியர்களை நியமனம் செய்வது வேதனை’ அளிப்பதாகத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறையில் 7 ஆயிரம் ரூபாய்க்கு ஆசிரியர்கள் நியமனம் ; கொந்தளிக்கும் ஆசிரியர்கள்!