ETV Bharat / state

சங்கிலியால் யானைகளை கட்டக்கூடாது - உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல் - dont tie elephant using chains

சங்கிலியால் யானைகளை கட்டக்கூடாது எனவும், யானைகளின் நலனை உறுதி செய்ய விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தும்படியும் தலைமை வனப் பாதுகாவலருக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்
High court
author img

By

Published : Aug 5, 2021, 6:51 PM IST

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் உள்ள ஆண்டாள், லட்சுமி என்ற இரு யானைகளையும் பராமரிப்பது தொடர்பாகவும், பாகன்கள் நியமிப்பது தொடர்பாகவும், ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் பொது நல வழக்கை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார்.

வழக்கை விசாரித்த நீதிமன்றம், "வளர்ப்பு யானைகள் பராமரிப்பு சட்ட விதிகள் படி, கோயில் யானைகள் பராமரிக்கப்படுகிறதா, எத்தனை யானைகள் உள்ளன எனப் பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் இன்று (ஆக.5) விசாரணைக்கு வந்தது.

அப்போது, முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் தாக்கல் செய்த அறிக்கையில், தமிழ்நாடு முழுவதும் 30 யானைகள் கோயில்களில் வளர்க்கப்படுவதாகவும், முறையான இடத்தில் பராமரிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அப்போது மனுதாரர் ரங்கராஜன் நரசிம்மன் குறுக்கிட்டு, "30 மட்டும் என்பது தவறு. மொத்தமாக 34 யானைகள் கோயில்களில் வளர்க்கப்படுகின்றன. பாதிக்கு மேற்பட்ட யானைகளுக்கு பாகன்கள் இல்லை. அவற்றின் கால்கள் கட்டப்பட்டு 8 மணி நேரத்திற்கும் மேலாக நிற்கவைக்கப்படுவதாகவும், ஸ்ரீரங்கம் கோயில் யானைக்காக பிரத்தியேக இடத்தை ஒதுக்க அரசுக்கு உத்தரவிட வேண்டுமெனவும் கோர்க்கை வைத்தார்.

இயற்கையான வனப்பகுதியில் யானைகளை பராமரிக்கலாமே

அப்போது தலைமை நீதிபதி, "இன்று காலை குதிரை ஒன்று மெரினா சாலையின் குறுக்கே வந்துவிட்டதாகவும், உடனடியாக காரிலிருந்து இறங்கி உதவ வேண்டுமென மனம் பதைபதைத்து.

மதத்தின் பெயரால் 2000 சதுர அடி அளவிலான கான்கிரீட் தளத்தில் யானைகளை பராமரிப்பதற்கு பதிலாக, இயற்கையான வனப்பகுதியில் பராமரிக்கலாமே.

குறிப்பாக 100 கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ள கோயில்களின் யானைகளை இயற்கையான பசுமையான இடத்தில் பராமரிக்கலாம். விழாக்காலங்களில் மட்டும் கோயிலுக்கு அழைத்து வராலாம் என அரசுக்கு யோசனை கூறினார்.

சங்கிலியால் யானைகளை கட்டக்கூடாது

கான்கரீட் பகுதியில் யானை வளர்ப்பதை தடுப்பதற்கான நேரம் வந்துவிட்டதாக கூறிய நீதிபதிகள், சங்கிலியால் யானைகளை கட்டக்கூடாது எனவும், யானைகளின் நலன உறுதி செய்ய விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தும்படியும் தலைமை வனப் பாதுகாவலருக்கு அறிவுறுத்தினர்.

யானைகளின் அன்றாட நடவடிக்கையை அறிக்கையாக தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 3 வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.

இதையும் படிங்க: பாலியல் சீண்டல்.. இளைஞருக்கு பாடம் புகட்டிய அஸ்ஸாம் ஜான்சி ராணி!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.