ETV Bharat / state

இடி மின்னல் எச்சரிக்கை

தமிழ்நாட்டில் வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக டெல்டா மாவட்டங்களில் அடுத்த இரண்டு நாள்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

7 மாவட்டங்களில் மிக கனமழை எச்சரிக்கை
7 மாவட்டங்களில் மிக கனமழை எச்சரிக்கை
author img

By

Published : Oct 2, 2021, 3:02 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக டெல்டா மாவட்டங்களில் அடுத்த இரண்டு நாள்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் மழை

அக்டோபர் 2: தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருச்சி, அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன்கூடிய மிக கன மழையும் - திருநெல்வேலி, தூத்துக்குடி, புதுக்கோட்டை, சிவகங்கை, சேலம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்கள் - காரைக்காலில் ஓரிரு இடங்களில் இடியுடன்கூடிய கன மழையும் பெய்யும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் (5.8 கிலோமீட்டர் உயரம்வரை) நிலவும் வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக இன்று டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருச்சி, அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிக கன மழையும், திருநெல்வேலி, தூத்துக்குடி, புதுக்கோட்டை, சிவகங்கை, சேலம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்கள், காரைக்காலில் ஓரிரு இடங்களில் இடியுடன்கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள் - புதுவை பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன்கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அக்டோபர் 3: மதுரை, தென்காசி, தேனி, திண்டுக்கல், சேலம், நாமக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள் - புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அக்டோபர் 4: தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், சேலம், தருமபுரி, ஈரோடு, கோயம்புத்தூர், அரியலூர், பெரம்பலூர் - டெல்டா மாவட்டங்கள், காரைக்கால் பகுதியில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள் - புதுவை, பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும் எனக் கூறப்பட்டுள்ளது.

அக்டோபர் 5, 6: கடலோர மாவட்டங்கள், வட உள் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், ஏனைய மாவட்டங்கள் - புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையின் வானிலை நிலவரம்

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும், நகரின் ஒருசில பகுதிகளில் இடிமின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34, குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு

விழுப்புரம் (விழுப்புரம்), ஊத்தங்கரை (கிருஷ்ணகிரி) தலா 8 செ.மீ., மண்டபம் (ராமநாதபுரம்), ராமேஸ்வரம் (ராமநாதபுரம்) தலா7 செ.மீ., மோகனூர் (நாமக்கல்), கிருஷ்ணராயபுரம் (கரூர்), முசிறி (திருச்சி) தலா 6 செ.மீ., மாயனூர் (கரூர்), திருக்கோயிலூர் (கள்ளக்குறிச்சி), பாம்பன் (ராமநாதபுரம்), மைலம் (விழுப்புரம்), வேப்பூர் (கூடலூ) தலா 5 செ.மீ., கீழ்பென்னாத்தூர் (திருவண்ணாமலை), ஊத்துக்குளி (திருப்பூர்), பொள்ளாச்சி (கோவை), தேன்கனிக்கோட்டை (கிருஷ்ணகிரி), முதுகுளத்தூர் (ராமநாதபுரம்), ராசிபுரம் (நாமக்கல்), அவிநாசி (திருப்பூர்) தலா 4 செ.மீ.

மீனவர்களுக்கான எச்சரிக்கை

வங்கக்கடல்: இன்று இலங்கை கடற்கரைக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக் கடல் பகுதி, மன்னார் வளைகுடா பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இதையும் படிங்க:'வீரபாண்டி ராஜா மறைவு தூண் சாய்வதுபோல' - பிறந்த நாளிலேயே மரணம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.