ETV Bharat / state

'பழுதடைந்த மருத்துவக்கட்டடங்களை ஜிபூம்பா செய்து ஒரு நாளில் கட்ட முடியாது' - அமைச்சர் மா.சு பேட்டி - chennai medical college

சென்னை சைதாப்பேட்டையில் உள்ள மாந்தோப்பு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள கணினி ஆய்வகத்தினை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் இன்று திறந்து வைத்தார்.

“பழுதடைந்த மருத்துவக்கட்டிடங்களை ஜிபூம்பா செய்து ஒரு நாளில் கட்ட முடியாது” - மா.சு பேட்டி

author img

By

Published : Jun 22, 2023, 3:41 PM IST

Updated : Jun 22, 2023, 3:47 PM IST

'பழுதடைந்த மருத்துவக்கட்டடங்களை ஜிபூம்பா செய்து ஒரு நாளில் கட்ட முடியாது' - அமைச்சர் மா.சு பேட்டி

சென்னை: சைதாப்பேட்டையில் உள்ள மாந்தோப்பு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள கணினி ஆய்வகத்தினை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் இன்று (ஜூன் 22) திறந்து வைத்தார்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், “சென்னை மாநகராட்சி சார்பில் இயங்கி வரும் மாநகராட்சி பள்ளிகள் அனைத்தும் திறம்பட செயல்பட்டு வருகிறது. கல்வித்தரம் மட்டுமல்லாது கட்டமைப்பும் திறம்பட மேம்படுத்தப்பட்டு வருகிறது.

அதன் மூலமாக 10, 12ஆம் வகுப்பு தேர்ச்சி விகிதம் அதிகரித்து வருகிறது. மாநகராட்சிப் பள்ளியில் மாணவர்களை சேர்க்க தயக்கம் காட்டிய பெற்றோர்கள் மத்தியில் தற்பொழுது, மாநகராட்சிப் பள்ளியில் மாணவர்களை சேர்ப்பதற்குப் போட்டி நிலவுகிறது. அந்த அளவிற்கு கல்வியின் தரம் அதிகரித்து சேர்க்கை அதிகரித்துள்ளது.

மாணவர்களின் தேர்ச்சி விகிதம் அதிகரித்து வரும் மாந்தோப்பு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களின் கல்வித் திறனை மேம்படுத்தும் வகையில், இந்தப் பள்ளியில் 30 லட்சம் ரூபாய் செலவில் சிறந்த கணினி ஆய்வகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தப் பள்ளியில் படித்த மாணவி, நீட் தேர்வில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான ஒதுக்கீட்டில் மருத்துவப் படிப்பில் சேர உள்ளார். சென்னை மருத்துவக் கல்லூரி மாணவர்கள் தங்கும் விடுதி இருக்கும் இடத்தை உயர் நீதிமன்றத்திற்கு வேண்டும் என்று கேட்டு இருந்தனர்.

அதற்காக மாணவர்களுக்கு மாற்று இடம் கொடுக்கப்பட்டு அங்கு தங்க வைத்திருக்கின்றனர். நான் அங்கு இருக்கக்கூடிய மாணவர்களை கலந்து ஆலோசித்த பிறகு புதிதாக கட்டி வருகிறோம். மேலும் ஒரு வருடத்திற்குள் புதிதாக கட்டப்பட்டு வரும் விடுதி மாணவர்களுக்காக திறந்து வைக்கப்படும். மேலும், உயர் நீதிமன்றத்தின் கட்டமைப்பையும் மேம்படுத்துவது மற்றும் மாணவர்களின் பாதுகாப்பையும் உறுதி செய்வது அரசின் கடமை. எனவே, கலந்தாலோசித்து தான் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது” என்றார்.

அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல்நிலை குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு, “அவருக்கு நேற்றுதான் அறுவை சிகிச்சை என்பது மேற்கொள்ளப்பட்டுள்ளது. தற்போது நலமாக இருக்கிறார். அவர் நேற்று மாலையே சிகிச்சைக்கு பிந்தைய மருத்துவப் பிரிவில்(post operation ward) மாற்றப்பட்டார். அவர் எத்தனை நாட்கள் ஓய்வெடுக்க வேண்டும் என்பதெல்லாம் மருத்துவர்கள் தான் கூற வேண்டும்.

சென்னை மருத்துவக்கல்லூரியின் பழுதடைந்த விடுதியும் நிதிநிலைக்கு ஏற்ப படிப்படியாக மாற்றி கட்டப்படும். மேலும் சினிமாவில் வருவது போல் ஜிபூம்பா செய்து பழுதடைந்த கட்டடங்களை ஒருநாளில் கட்ட முடியாது. அடுத்த மாதம் புதுக்கோட்டையில் பல் மருத்துவக் கல்லூரியினை திறந்து வைக்கப்பட இருக்கிறோம். தமிழகத்தில் இதுவரையிலும் ஆறு செவிலியர் பயிற்சி கல்லூரிகள் மட்டுமே இருந்த நிலையில் தற்போது புதிதாக 11 செவிலியர் பயிற்சி கல்லூரிகளுக்கு அனுமதி பெறப்பட்டுள்ளது” என்றார்.

மேலும் பேசிய அவர், “இன்று மாலை மேடவாக்கத்தில் ஆறு புதிய ஆரம்ப சுகாதார நிலைய கட்டடமும், நாளை மதுரையில் ஒரே நாளில் 19 புதிய ஆரம்ப சுகாதார நிலைய கட்டடங்களையும் திறந்து வைக்க இருக்கிறேன். தமிழ்நாட்டில் பழுதடைந்துள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள், வாடகை கட்டடத்தில் இயங்கி வரும் துணை சுகாதார நிலையங்களையும் புதிய கட்டடங்களில் மாற்றுவதற்கு நிதிநிலைக்கு ஏற்ப நடவடிக்கை எடுக்கப்படும்.

அனைத்துத் துறையிலும் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை நடத்த முதலமைச்சர் அறிவுறுத்தி இருக்கிறார். அதன்படி மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் வரும் 24ஆம் தேதி 100 இடங்களில் கலைஞர் நூற்றாண்டு மெகா மருத்துவ முகாம் நடைபெற உள்ளது.

அதில் குறிப்பாக சென்னையில் 10 இடங்களில் நடைபெற உள்ளது. மண்டலம் 10ல் நடைபெறும் முகாமில் நான் கலந்து கொண்டு திறந்து வைக்க இருக்கிறேன். இந்த முகாவில் அனைத்து பரிசோதனையும் செய்யப்படும். நீட் தேர்வில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர் பிரபஞ்சன் தேசிய அளவில் சாதனைப் புரிந்துள்ளார்.

தனியார் பள்ளி மாணவராக இருந்தாலும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். நீட் பயிற்சியில் பள்ளி கல்வித்துறை, உயர் கல்வித்துறையில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அரசுப் பள்ளி மாணவர்களுக்கு நீட் பயிற்சி வகுப்புகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது” என்று கூறினார்.

இதையும் படிங்க: காழ்ப்புணர்ச்சியினால் சிலர் சனாதனத்தைப் பற்றி தவறான எண்ணம் கொண்டுள்ளனர் - ஆளுநர் ஆர்.என். ரவி

Last Updated : Jun 22, 2023, 3:47 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.