ETV Bharat / state

எழுவர் விடுதலை தொடர்பாக முடிவெடுப்பதில் ஆளுநர் கால தாமதம்: உயர் நீதிமன்றம் அதிருப்தி

சென்னை: முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்துவரும் ஏழு பேரின் விடுதலை தொடர்பாக 2 ஆண்டுகளாக ஆளுநர் முடிவெடுக்காமல் இருப்பதற்கு சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

Madras high court
சென்னை உயர் நீதிமன்றம்
author img

By

Published : Jul 22, 2020, 1:53 PM IST

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் கைதான பேரறிவாளன் கடந்த 28 ஆண்டுகளாக சென்னை புழல் சிறையில் ஆயுள் தண்டனைக் கைதியாக உள்ளார். பேரறிவாளனுக்கு 90 நாள்கள் பரோல் வழங்கக்கோரி, அவரது தாய் அற்புதம்மாள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

அதில், புழல் சிறையில் உள்ள 50 கைதிகளுக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், பல்வேறு நோய்களால் அவதிப்பட்டுவரும் பேரறிவாளனுக்கு கரோனா தொற்று பாதிக்கும் அபாயம் இருப்பதால், அவருக்கு 90 நாள்கள் பரோல் வழங்க வேண்டும் எனக் கோரியுள்ளார்.

இந்த மனு நீதிபதிகள் கிருபாகரன், வேலுமணி ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில், 2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பேரறிவாளனுக்கு 90 நாள்கள் பரோல் வழங்கப்பட்ட நிலையில், 2 ஆண்டுகளுக்குப் பிறகுதான் மீண்டும் பரோல் வழங்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டது.

மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சண்முகசுந்தரம், பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேர் விடுதலை தொடர்பான தமிழ்நாடு அரசின் தீர்மானம் கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக ஆளுநரிடம் நிலுவையில் உள்ளதாகத் தெரிவித்தார். மேலும், இதுபோன்ற சந்தர்ப்பங்களில் பரோல் வழங்க 2 ஆண்டுகள் வரை காத்திருக்க தேவையில்லை என ஏற்கனவே சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளதையும் சுட்டிக்காட்டினார்.

அப்போது, குறுக்கிட்ட நீதிபதி கிருபாகரன், அரசியலமைப்புப் பதவியில் உள்ளவர்கள் மீதான நம்பிக்கையின் அடிப்படையில்தான், அவர்கள் முடிவெடுக்க வேண்டிய விவகாரங்களில் கால அவகாசங்கள் நிர்ணயிக்கப்படவில்லை என்று கூறி, 2 ஆண்டுகளுக்கு மேலாக இவர்களின் விடுதலை தொடர்பான தீர்மானத்தின் மீது ஆளுநர் முடிவெடுக்காமல் இருப்பதற்கு அதிருப்தி தெரிவித்தார்.

மேலும், ஏழு பேரின் விடுதலை தொடர்பாகவும், பேரறிவாளனுக்கு பரோல் வழங்குவது தொடர்பாகவும் பதிலளிக்க தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டு, வழக்கை ஜூலை 29ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

இதையும் படிங்க: சர்ச்சை பேச்சு விவகாரம்; மூத்த வழக்கறிஞருக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.