ETV Bharat / state

‘நுங்கம்பாக்கம்’ படத்திற்கு தடைகோரிய வழக்கு தள்ளுபடி

author img

By

Published : Oct 25, 2019, 1:33 PM IST

சென்னை: நுங்கம்பாக்கம் படத்திற்கு தடை விதிக்கக் கோரி, ராம்குமாரின் தந்தை தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

nungambakkam-movie-release-case

சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் மென்பொறியாளர் ஸ்வாதி கடந்த 2016ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் செங்கோட்டையைச் சேர்ந்த ராம்குமார் என்பவர் கைது செய்யப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டபோது, அங்கு மின்சார வயரை கடித்து ராம்குமார் தற்கொலை செய்துகொண்டார்.

nungambakkam-movie-release-case
மென்பொறியாளர் ஸ்வாதி கொலை வழக்கு

தன் மகன் மீது எந்த தவறும் இல்லை, ராம்குமார் அப்பாவி எனவும், இது தொடர்பான மனித உரிமை ஆணையம், தாழ்த்தப்பட்டோருக்கான ஆணைய விசாரணைகள் நிலுவையில் உள்ளது எனவும் ராம்குமாரின் தந்தை பரமசிவன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அதில், தன் மகனின் மரணத்தில் உள்ள சந்தேகம் குறித்து சட்டப்போராட்டம் நடத்தி வரும் நிலையில், இச்சம்பவங்களை மையமாக வைத்து இயக்குநர் ரமேஷ் என்பவர் ‘நுங்கம்பாக்கம்’ என்ற தலைப்பில் திரைப்படத்தை எடுத்துள்ளார்.

nungambakkam-movie-release-case
நுங்கம்பாக்கம் திரைப்பட வழக்கு தள்ளுபடி

இப்படத்தை வெளியிட்டால் விசாரணை பாதிக்கும், உண்மை நிலை வெளியில் தெரியாத நிலை ஏற்படும் என்பதால் இந்த திரைப்படத்தை வெளியிட இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்றும், படத்தின் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளரிடம் விசாரணை நடத்த குழு ஒன்றை அமைக்க வேண்டும் எனவும் அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி ராஜா முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. ராம்குமாரின் மரணம் தொடர்பாக தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கான விசாரணை ஆணையம் விசாரணை மேற்கொண்டு வருவருவதால் இந்த வழக்கில், நீதிமன்றம் தலையிட முடியாது என தெரிவித்து மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

இதையும் படிங்க...

திரும்பி வந்துட்டேன்னு சொல்லு..! - ஸ்லிம்மா... டக்கரா... உருமாறிய 'இந்தியாவின் பிக் பி'

Intro:Body:நுங்கம்பாக்கம் படத்திற்கு தடை விதிக்க கோரி, ராம்குமாரின் தந்தை தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் மென்பொறியாளர் ஸ்வாதி கடந்த 2016 ஆம் ஆண்டு படுக்கொலை செய்யப்பட்டார்.

இந்த வழக்கில் செங்கோட்டையை சேர்ந்த பொறியியல் மாணவர் ராம்குமார் கைது செய்யப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்ட போது அங்கு மின்சார வயரை கடித்து ராம்குமார் தற்கொலை செய்து கொண்டர்.

தன் மகன் மீது எந்த தவறும் இல்லை, ராம்குமார் அப்பாவி எனவும், இது தொடர்பான மனித உரிமை ஆணையம், தாழ்த்தப்பட்டோருக்கான ஆணைய விசாரணைகள் நிலுவையில் உள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

தன் மகனின் மரணத்தில் உள்ள சந்தேகம் குறித்து சட்டப்போராட்டம் நடத்தி வரும் நிலையில், இச்சம்பவங்களை மையமாக வைத்து இயக்குனர் ரமேஷ் என்பவர் நுங்கம்பாக்கம் என்ற தலைப்பில் திரைப்படத்தை எடுத்துள்ளார்.

இப்படத்தை வெளியிட்டால் விசாரணை பாதிக்கும், உண்மை நிலை வெளியில் தெரியாத நிலை ஏற்படும் என்பதால் இந்த திரைப்படத்தை வெளியிட இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்றும், படத்தின் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரிடம் விசாரணை நடத்த குழு ஒன்றை அமைக்க வேண்டும் என ராம்குமாரின் தந்தை பரமசிவன் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ராஜா முன் விசாரணை வந்தது, ராம்குமாரின் மரணம் தொடர்பாக தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கான விசாரணை ஆணையம் விசாரணை மேற்கொண்டு வருவருவதால் இந்த வழக்கில், நீதிமன்றம் தலையிட முடியாது என தெரிவித்து மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.