ETV Bharat / state

பத்திரப்பதிவு கட்டணத்தைக் குறைக்க தமிழ்நாடு அரசு திட்டம் - TN Govt plants to reduce bond fees

சென்னை:கரோனா தொற்று பரவல் காரணமாக பின்னடைவை சந்தித்துவரும் ரியல் எஸ்டேட் துறையை ஊக்குவிக்கும் வகையில், பத்திரப் பதிவுக் கட்டணத்தைக் குறைப்பது தொடர்பாக தமிழ்நாடு அரசு பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Tamil Nadu
Tamil Nadu
author img

By

Published : Jan 6, 2021, 8:17 PM IST

ரியல் எஸ்டேட் துறை கடந்த சில ஆண்டுகளாகவே பல்வேறு சவால்களை சந்தித்துவருகிறது. குறிப்பாக, 2016ஆம் ஆண்டு பண மதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதிலிருந்தே வீடு, மனை விற்பனை சரிவு கண்டுள்ளதாக கட்டுமான நிறுவனங்கள் கூறுகின்றன.

கரோனா தொற்று பாதிப்பால் எதிர்பாராத மிகப்பெரிய சரிவை பொருளாதாரம் கண்டுள்ள நிலையில், இந்த நேரத்தில் ரியல் எஸ்டேட் துறைக்கு உதவும் வகையில், பத்திரப் பதிவுக் கட்டணத்தைக் குறைக்க வேண்டும் என தொழில்துறையினர் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

இதுதொடர்பாக, கடந்த மாதம் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில், தமிழ்நாடு அரசு அலுவலர்கள், சென்னை பெருநகர வளர்ச்சி குழும அலுவலர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருடன் ரியல் எஸ்டேட் துறையினர் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், ரியல் எஸ்டேட் வணிகத்தை ஊக்குவிக்க அரசு முத்திரைத் தாள் வரி, பதிவுக் கட்டணத்தைக் குறைக்க வேண்டும் என்றும், இதனால் அரசுக்கு வரி இழப்பு ஏற்படாது, மாறாக கூடுதலாக வரி வசூலாகும் என தெரிவித்துள்ளோம் என தமிழ்நாடு கிரடாய் தலைவர் ஸ்ரீதரன் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறும்போது, "தமிழ்நாட்டில் முத்திரைத்தாள் வரியைக் குறைக்க வேண்டும் என நீண்ட நாட்களாக வலியுறுத்திவருகிறோம். கரோனா தொற்றால் பாதிப்பைச் சந்தித்துள்ள ரியல் எஸ்டேட் தொழிலுக்கு உதவும் வகையில் இது அமையும். இதன்மூலம் வாடிக்கையாளர்களும் பெருமளவில் பயன்பெறுவர். இதுகுறித்து பரிசீலிப்பதாக தமிழ்நாடு அரசு பதிலளித்துள்ளது.

அண்மையில், மஹாராஷ்டிராவில் முத்திரைத் தாள் வரி இரண்டு விழுக்காடாக குறைக்கப்பட்டதைத் தொடர்ந்து, அங்கு வீடு விற்பனை பன்மடங்கு அதிகரித்துள்ளது. இதனால் அம்மாநில அரசுக்கு இழப்பு ஏற்படவில்லை. பல்வேறு மாநிலங்களும் இதனைக் குறைத்துள்ள நிலையில், தமிழ்நாடு அரசும் முத்திரைத்தாள் வரியைக் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.

தற்போது நாட்டிலேயே அதிக அளவிலாக தமிழ்நாட்டில் 11 விழுக்காடு முத்திரை தாள் வரி வசூலிக்கப்படுகிறது, அதனை ஐந்து விழுக்காடாக குறைத்தால் 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான வீடு வாங்குபவர்களுக்கு மூன்று லட்சம் ரூபாய் வரை சேமிப்பாகும் என ரியல் எஸ்டேட் அதிபர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து தமிழ்நாடு அரசு பரிசீலித்து வருவதாகவும், தேர்தல் அறிவிப்புக்கு முன்பு முத்திரை தாள் வரி, பதிவுக் கட்டணம் குறைக்கப்படும் என்று தகவல் அறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

இதையும் படிங்க:முத்திரைத்தாள் வரியைக் குறைக்க ரியல் எஸ்டேட் துறையினர் கோரிக்கை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.