சென்னை வியாசர்பாடி கிருஷ்ணமூர்த்தி நகர்ப் பகுதியைச் சேர்ந்தவர் அர்ஜூனன்(41). இவர் தரமணியில் உள்ள தமிழ்நாடு அச்சுத் துறை அலுவலகத்தில் கடைநிலை ஊழியராகப் பணிபுரிந்து வருகிறார். இவர் பல மாதங்களாக நீரிழிவு நோயால் அவதிப்பட்டு வந்துள்ளார். பின்னர், மருத்துவரின் அறிவுரைப்படி கடந்த மாதம் 29ஆம் தேதி சிகிச்சைக்காக, அண்ணா சாலையில் உள்ள ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
இந்நிலையில் நீரிழிவு நோய் அதிகமானதால் அர்ஜுனனின் ஒரு காலை எடுக்க வேண்டும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதனால் ஏற்படும் வலிக்குப் பயந்து கழிவறைக்குச் சென்று, அர்ஜூனன் தனது போர்வையை வைத்து ஜன்னலில் தூக்கு மாட்டிக் கொண்டு, தற்கொலை செய்து கொண்டார்.
இதைப் பார்த்த அவரது மனைவி காவல் துறைக்குத் தகவல் அளித்தார். பின்னர், சம்பவ இடத்திற்கு விரைந்த வந்த திருவல்லிக்கேணி காவல்துறை , உடலை மீட்டு உடற்கூறாய்வுக்கு கோசா மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். இதுகுறித்து காவல் துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: வீட்டின் கதவை உடைத்து நகை, பணம் கொள்ளை!