தமிழ்நாட்டில் கடந்த ஆகஸ்ட் 16ஆம் தேதி முதல் அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தொடங்கியது. இந்தாண்டு பெற்றோர்கள் அதிக ஆர்வமுடன் அரசு பள்ளியில் மாணவர்களை சேர்த்து வருகின்றனர். ஒன்றாம் வகுப்பில் 3 லட்சத்து எட்டாயிரம் மாணவர்களும், ஆறாம் வகுப்பில் 3 லட்சத்து 66 ஆயிரம் மாணவர்களும், ஒன்பதாம் வகுப்பில் 1 லட்சத்து நான்காயிரம் மாணவர்களும், பதினோராம் வகுப்பில் 4 லட்சத்து 14 ஆயிரம் மாணவர்களும் புதிதாக அரசுப் பள்ளிகளில் சேர்ந்துள்ளனர்.
இந்த ஆண்டில் ஒன்றாம் வகுப்பிலிருந்து 12ஆம் வகுப்பு வரை மொத்தமாக அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் 16 லட்சம் மாணவர்கள் சேர்ந்துள்ளனர். இதில் ஒன்றாம் வகுப்பு, ஆறாம் வகுப்பு மற்றும் பதினொன்றாம் வகுப்பில் அதிகளவு மாணவர்கள் சேர்ந்துள்ளதாகத் தெரிகிறது. பள்ளிக்கல்வித் துறையின் பல்வேறு நலத்திட்ட உதவிகள் காரணமாக பெற்றோர்கள் ஆர்வமுடன் தங்கள் குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேர்ந்துள்ளனர் எனவும் பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது.