சென்னை விமான நிலையம் வழியாக அதிகளவில் கடத்தல் பொருட்கள் கொண்டுவரப்படும் நிலையில் மலேசியாவிலிருந்து வந்த விமானத்தில் சென்னையைச் சேர்ந்த வெங்கடேஷ்(43), சையத் ஜின்னா முகமது(30) ஆகியோரிடம் சந்தேகத்தின் பேரில் சுங்கத்தூறை அலுவலர் சோதனை நடத்தினர். அப்போது, முன்னுக்குப் பின் முரணாக அவர்கள் பேசியதால் அவர்களது உடமைகளை சோதனையிட்டனர்.
அப்போது, கணினி உள்ளிட்ட கருவிகள் இருந்தன. இதனையடுத்து அவற்றை பிரித்து பார்த்தபோது அதில் உள்ள டிரான்ஸ்பார்மரில் தங்க கட்டிகளை மறைத்து வைத்து கடத்தி வந்தது கண்டறியப்பட்டது. மேலும் 2 பேரின் உள்ளாடையில் தங்க சங்கிலிகளை மறைத்து வைத்து கடத்தி வந்ததையும் அலுவலர்கள் கண்டுபிடித்தனர்.
இருவரிடமிருந்தும் ரூ.29 லட்சத்து 30 ஆயிரம் மதிப்பிலான 748 கிராம் தங்கத்தை அலுவலர்கள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக வெங்கடேஷ், சையத் ஜின்னா முகமது ஆகியோரிடம் விசாரித்து வருகின்றனர்.
மாத்திரையில் இருந்த இரும்புக் கம்பி; அதிர்ச்சியில் வாடிக்கையாளர்!