துபாய், ரியாத் ஆகிய நாடுகளிலிருந்து சென்னைக்கு வந்த விமானங்களில் கடத்தி வரப்பட்ட தங்கத்தை சுங்கத் துறை அலுவலர்கள் கைப்பற்றினர்.
சுமார் 65 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 1.65 கிலோ தங்கம் சென்னை விமான நிலையத்தில் நேற்று பறிமுதல் செய்யப்பட்டது. இதில், உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த தமீமா(32) என்பவர், தான் எடுத்துவந்திருந்த எமர்ஜென்சி விளக்கிற்குள் தங்கத்தை மறைத்து எடுத்து வந்துள்ளார். சேலத்தைச் சேர்ந்த சிவசந்திரன், திருவள்ளூரைச் சோ்ந்த சேக் முகமது(37), ராமநாதபுரத்தைச் சேர்ந்த நைனா முகமது (22), ரகமத் அலி (25) ஆகியோர் தங்கள் உள்ளாடைகளுக்குள் தங்கத்தை மறைத்து வைத்துக் கடத்தி வந்திருந்தனர்.
இந்த ஐந்து பேரையும் சென்னையைச் சேர்ந்த சுங்கத் துறை அலுவலர்கள் கைதுசெய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இதையும் படிங்க: 14 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!