தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை நிதிநிலை அறிக்கையின்போது மத்திய அரசு உயர்த்தியது. அதன்பின் ஆபரணத் தங்கத்தின் விலையானது கிடுகிடுவென உயரத் தொடங்கியது. இந்நிலையில், ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.192 உயர்ந்து 29,016-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த பத்து நாட்களில் ரூ.1,688 உயர்ந்துள்ளது.
ஆகஸ்ட் 4ஆம் தேதி ரூ.27,328க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு சவரன் தங்கம் விலை இன்று ரூ.29ஆயிரத்தை கடந்தது. தங்கத்தின் விலை விண்ணைமுட்டும் அளவிற்கு தொடர் உயர்வை சந்தித்து வருவது குறிப்பிடத்தக்கது.