சென்னை அடுத்த தாம்பரம் சானிடோரியத்தில் உள்ள தேசிய சித்த மருத்துவமனையில் சித்த மருத்துவ நிறுவனம் மற்றும் செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலி திட்ட இயக்கம் இணைந்து தமிழும், தமிழ் மருத்துவமும் என்ற விழிப்புணர்வு விழா நடத்தியது.
இவ்விழாவில் கலந்துகொண்ட தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் க. பாண்டியராஜன், அயோத்திதாச பண்டிதர் மற்றும் திருமூலர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது தமிழ் மற்றும் தமிழ் மருத்துவ மேம்பாட்டு பணிகளுக்காக பல்வேறு திட்டங்களை முன்வைத்து சித்த மருத்துவ நிறுவனம் மற்றும் செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலி திட்ட இயக்கம் ஆகிய இருவருக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடபட்டது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பாண்டியராஜன், "கரோனா தடுப்பில் கபசுர குடிநீர் சிறந்து விளங்குவதாக கிடைக்கபட்ட அங்கீகாரம் உலகளவில் தமிழ் மருத்துவத்துக்கு கிடைத்த வெற்றி. அதேபோல் தமிழ் வளர்ச்சிக்கு என்ன செய்தோம் என ஸ்டாலின் கேட்கிறார். மாணவர்கள் புதிய தமிழ்சொற்களை உருவாக்கி தமிழ் திறனை மேம்படுத்தி கொள்வதற்காக சொற்குவை திட்டத்தை செயல்படுத்தி பல்வேறு விருதுகள் அறிவித்துள்ளோம்.
அதிமுகவுக்கு மக்களிடம் நற்பெயர் கிடைப்பதை தடுக்கவே 2ஆயிரத்து 500 ரூபாய் வழங்கப்படுவததை திமுக தடுக்கிறது" என்று சாடினார்.
இதையும் படிங்க: தமிழகத்தில் நாளை மறுநாள் கரோனா தடுப்பூசி ஒத்திகை! - ராதாகிருஷ்ணன் தகவல்!