ETV Bharat / state

கரோனா சிகிச்சை மையத்தில் இருந்து தப்பியோடிய ரவுடி!

மதுரை கரோனா சிகிச்சை மையத்தில் இருந்து தப்பியோடிய கஞ்சா வழக்கில் கைதான ரவுடியை காவல்துறையினர் தீவிரமாகத் தேடிவருகின்றனர்.

கரோனா சிகிச்சை மையத்தில் இருந்து தப்பியோடிய ரவுடி

author img

By

Published : Apr 27, 2021, 6:14 PM IST

மதுரை: மதிச்சியம் சப்பானி கோயில் தெரு பகுதியைச் சேர்ந்தவர் ராஜாங்கம். இவரது மகன் மீனாட்சி சுந்தரம் (23). இவர்மீது மதுரை மாநகரில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் அடிதடி, கஞ்சா வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இந்நிலையில், வைகை வடகரையில் அமைந்துள்ள மதீனா பள்ளிவாசல் அருகே கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் கஞ்சா விற்பதாக காவல்துறைக்கு கிடைத்த தகவலை அடுத்து, அப்பகுதியில் அதிரடி சோதனை நடத்தினர். காவலர்களைக் கண்டதும் அந்தக் கும்பல் ஓட்டம் பிடித்தது. அப்போது, இரண்டு பேர் காவலர்களிடம் வசமாக சிக்கினர்.

அவர்களிடம் இருந்து 30 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. அவர்களை அழைத்துச் சென்ற காவலர்கள் தீவிர விசாரணை மேற்கொண்டபோது ஒருவர் மீனாட்சிசுந்தரம், மற்றொருவர் புளியந்தோப்பு வழுக்கை கார்த்திக் (24) என்பது தெரியவந்தது.

இந்நிலையில், அவர்கள் இருவருக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் மீனாட்சி சுந்தரம் கரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இதனை அடுத்து அரசு ராஜாஜி மருத்துவமனையில் உள்ள கரோனா சிகிச்சை மையத்தில் அவர் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு 24 மணி நேர காவல் துறை பாதுகாப்போடு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்றிரவு(ஏப்.26) 7 மணியளவில் காவல்துறையினரின் காவலையும் மீறி ரவுடி மீனாட்சிசுந்தரம் தப்பி ஓடிவிட்டார். இதனையடுத்து உயர்அலுவலர்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், தப்பி ஓடிய ரவுடியை தீவிரமாக காவலர்கள் தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: வேகமாக பரவும் கரோனா இரண்டாம் அலை- எச்சரிக்கும் மருத்துவர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.