மகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்தநாள் விழா அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்களால் நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டுவருகிறது.
ஆங்கிலேயர்களால் ஆக்கிரமிக்கப்பட்ட இந்திய தேசத்தை மீட்பதற்காக சுதந்திரப் போராட்ட தியாகிகள் பலரும் பல்வேறு விதமான போராட்டங்களில் ஈடுபட்டுவந்த நிலையில், அகிம்சை வழியில் தனது போராட்டத்தை ஆங்கிலேயர்களுக்கு எதிராக கையிலெடுத்து அதில் வெற்றியும் கண்டு உலகில் உள்ள அனைத்து நாடுகளுக்கும் அகிம்சையை போதித்த தேசப்பிதாவாக பார்க்கப்படும் மாகாத்மா காந்தியை நாம் அனைவரும் அறிவோம்.
இந்த மகானை இந்த நன்னாளில் நினைவுகூரும் விதமாக தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் காந்தியடிகளின் பெற்றோர், அவரின் குழந்தை பருவம், கல்வி பயின்றது, அரசியல் வாழ்வில் ஈடுபட்டது, போராட்டங்களில் பங்கேற்பு, சிறை செல்லுதல்,அவரது இறுதி ஊர்வலம் என அனைத்தையும் கண்முன் நிறுத்தும்படியாக புகைப்பட கண்காட்சி நடைபெற்றது. இதை காங்கிரஸ் கட்சியினர் மட்டுமல்லாது பொதுமக்களும் ஆர்வத்துடன் பார்த்துச் சென்றனர்.
இதையும் படிங்ககாந்தி 150: ஈடிவி பாரத்தின் காந்தி சிறப்புப் பாடல்