மறைந்த முன்னாள் முதலமைச்சரும் திமுக தலைவருமான கருணாநிதியின் 98ஆவது பிறந்த நாளை முன்னிட்டு தமிழ்நாடு அரசு இன்று (ஜூன்.03) ஆறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.
மகளிர் நலன் கருதி திமுக அரசு பொறுப்பேற்ற அன்றே, மகளிருக்கு அரசு நகரப் பேருந்துகளில் இலவச பயணச் சலுகையை அறிவித்து முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டார். இந்நிலையில் தற்போது மாற்றுத் திறனாளிகள், திருநங்கைகள் ஆகியோருக்கும் நகரப்புற அரசு பேருந்துகளில் இலவச பயணச் சலுகை வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார்.
தளர்வுகளற்ற ஊரடங்கு காலம் விலக்கிக் கொள்ளப்பட்டவுடன் இந்த ஆணை நடைமுறைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: போர் நிறுத்த நடவடிக்கை குறித்து காஷ்மீர் எல்லையில் ராணுவத் தளபதி ஆய்வு