சென்னை பள்ளிகளில் படித்த மாணவ, மாணவர்களின் எதிர்காலம் சிறப்பாக அமைய மத்திய அரசின் NCVT சான்றிதழுடன் கூடிய தொழில் பயிற்சி தொழில் பாடப்பிரிவுகளில் அளிக்கப்படுகிறது.
பயிற்சி வகுப்புகள் - பயிற்சி காலம் - சேர்க்கை எண்ணிக்கை - கல்வி தகுதி
கணினி இயக்குபவர் மற்றும் நிகழ்ச்சி தொகுப்பாளர் - ஒரு வருடம் - 48 - பத்தாம் வகுப்பு தேர்ச்சி
குழாய் பொருத்துநர் - ஒரு வருடம் - 48 - எட்டாம் வகுப்பு தேர்ச்சி
பொருத்துநர் - இரண்டு வருடம் - 20 - பத்தாம் வகுப்பு தேர்ச்சி
கம்மியர் மோட்டார் வாகனம் - இரண்டு வருடம் 24 - பத்தாம் வகுப்பு தேர்ச்சி
மின் பணியாளர் - இரண்டு வருடம் - 20 - பத்தாம் வகுப்பு தேர்ச்சி
எலக்ட்ரானிக் மெக்கானிக் - இரண்டு வருடம்- 24 - பத்தாம் வகுப்பு தேர்ச்சி
சென்னை பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கு, சென்னை மாநகராட்சி ஊழியர்களின் குழந்தைகளுக்கு மாணவர்கள் சேர்க்கையில் முன்னுரிமை அளித்து, மீதி காலியாக உள்ள இடங்களுக்குச் சென்னை மாவட்டத்தில் உள்ள பிற பள்ளிகளில் படித்த ஏழை எளிய மாணவர்கள் அவ்வப்போது அரசால் வெளியேற்றப்படும் விதிமுறையின்படி சேர்க்கை வழங்கப்படும்.
தொழிற்பயிற்சி நிலையத்தின் சிறப்பம்சம் முற்றிலும் இலவச பயிற்சி அளிப்பது ஆகும். மேலும் பயிற்சிபெறும் மாணவர்களுக்கு இலவச சீருடை இலவச பஸ் பாஸ் மற்றும் பயிற்சி காலத்தில் மாதம்தோறும் ரூபாய் 500 உதவித்தொகை வழங்கப்படுகின்றது. மேலும் இலவச மடிக்கணினி வழங்கப்பட உள்ளது.
2020-2021ஆம் ஆண்டு விண்ணப்பம் படிவம் மாநகராட்சி (www.chennaicorporation.gov.in) மற்றும் தொழிற்பயிற்சி நிலைய இணையதளத்தின் (gccapp.chennaicorporation.gov.in/cciti/) மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்தை முழுமையாக பூர்த்தி செய்து அதனுடன் பள்ளி மாற்றுச்சான்றிதழ் மதிப்பெண் சான்றிதழ் மற்றும் சாதி சான்றிதழ் ஆகியவற்றை படிவத்துடன் இணைத்து மாநகராட்சி தொழிற்பயிற்சி நிலைய மின்னஞ்சலுக்கு ( chennaicorporationiti@gmail.com ) அனுப்ப வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பம் கடைசி நாள் 3.9.2020 மேலும் சேர்க்கைக்கான கலந்தாய்வு நாள் 7.9.2020 கலந்தாய்வின்போது விண்ணப்பதாரரின் மதிப்பெண் தகுதி வரிசையின் படி மற்றும் அரசு இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் பாடப்பிரிவு ஒதுக்கீடு செய்து கலந்தாய்வு அன்று பயிற்சிகள் சேருவதற்கான அனுமதி வழங்கப்படும். மேலும், ஆண்களுக்கு பயிற்சியில் சேர வயது வரம்பு 14 முதல் 40 வயதாகும் பெண்களுக்கு வயது வரம்பு கிடையாது என மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.