ETV Bharat / state

ஒரே நாளில் 5 சிறப்பு தனி விமானங்களில் சென்ற வெளிநாட்டவர்கள்!

சென்னை: சர்வதேச விமான நிலையத்திலிருந்து நேற்று ஒரே நாளில் ஐந்து சிறப்பு தனி விமானங்களில் வெளிநாட்டவா்கள் 941 போ் தங்களுடைய நாடுகளுக்கு புறப்பட்டு செல்கின்றனர்.

forigners
forigners
author img

By

Published : Apr 11, 2020, 9:43 AM IST

கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஏப்ரல் 14 ஆம் தேதிவரை ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருப்பதால், ஊரடங்கு மேலும் நீடிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் தமிழ்நாட்டில் உள்ள வெளிநாட்டவா்கள் தொடர்ச்சியாக தங்கள் நாடுகளுக்கு திரும்பிச் செல்கின்றனா்.

இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்கு விமான சேவைகள் கடந்த மாதம் 22ஆம் தேதியிலிருந்து நிறுத்தப்பட்டுள்ளது. ஆனாலும், அந்தந்த நாட்டு தூதரக அலுவலர்கள், மத்திய அரசுடன் பேசி, சிறப்பு அனுமதி பெற்று தங்கள் நாட்டு மக்களை தனி விமானங்களில் அழைத்துக்கொள்கின்றனர். ஏற்கனவே சென்னையிலிருந்து கடந்த 2 வாரங்களில் மலேசியா, ஜெர்மனி, அமெரிக்கா, ஓமன் நாடுகளைச் சோ்ந்தவா்கள் 16 சிறப்பு தனி விமானங்களில் தங்கள் நாடுகளுக்கு திரும்பியுள்ளனா்.

இந்நிலையில் நேற்று ஒரே நாளில் 5 சிறப்பு தனி விமானங்களில் சிங்கப்பூர், ஜப்பான், அமெரிக்கா நாடுகளைச் சேர்ந்தவர்கள் தங்கள் நாடுகளுக்கு திரும்பினர்.

இன்று நள்ளிரவு 12.30 மணிக்கு ஸ்கூட் ஏா்லைன்ஸ் விமானத்தில் சென்னையிலிருந்து சிங்கப்பூருக்கு 236 பேர் சென்றனா். அதேபோல், நேற்று ஒரே நாளில் மட்டும் சென்னையிலிருந்து 5 விமானங்களில் மொத்தம் 941 போ் அமெரிக்கா, ஜப்பான், சிங்கப்பூா் சென்றுள்ளனா்.

மேலும், இன்று அதிகாலை 1.45 மணிக்கு சிங்கப்பூரைச் சேர்ந்த சேர்ந்த 248 பேர் ஸ்கூட் ஏா்லைன்ஸில் புறப்பட்டு சென்றனர். அதுமட்டுமின்றி, இன்று மாலை 4.10 மணிக்கு ஏர் இந்தியா விமானத்தில் மும்பை வழியாக அமெரிக்கா செல்லும் 118 அமெரிக்கா்களும், மாலை 6 மணிக்கு டெல்லி வழியாக அமெரிக்கா செல்லும் ஏர் இந்தியா விமானத்தில் 124 அமெரிக்கா்களும் செல்கின்றனா்.

விமானத்திற்காக காத்திருந்த பயணிகள்
விமானத்திற்காக காத்திருந்த பயணிகள்

இரவு 8.30 மணிக்கு சென்னையிலிருந்து நிப்பான் ஏா்லைன்ஸ் விமானத்தில் ஜப்பானில் உள்ள நாரிட்டா நகருக்கு 215 ஜப்பானியா்கள் செல்கின்றனா்.

இந்த வெளிநாட்டவர்களில் பெரும்பான்மையானோர் சுமாா் 70 விழுக்காடுக்கும் அதிகமானவா்கள் பணியின் நிமித்தமாக இங்கிருந்தவா்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ஆந்திராவில் மின்னல் தாக்கி 10 பேர் உயிரிழப்பு!

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.