சென்னை : கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் கைகளைப் பயன்படுத்தாமல் கால்களால் லிஃப்ட்களை இயக்கும் வசதி பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இது மெட்ரோ ரயில் நிர்வாகத்தால் உருவாக்கப்பட்டு, முதலில் சோதனை அடிப்படையில் கோயம்பேடு, மெட்ரோ ரயில்வே தலைமையகத்தில் கடந்த மே மாதம் நிறுவப்பட்டது.
தற்போது 32 சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களிலும் கால்களால் லிஃப்ட்களை இயக்கும் வசதி பயன்பாட்டுக்கு வந்துள்ளது. அதேபோல், அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களில் உள்ள 190 கழிவறைகளிலும் சுகாதாரத்தை வலுப்படுத்தும் நோக்கில் கால்களால் இயக்கப்படும் குழாய்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.
மேலும், மெட்ரோ ரயில் நிலையக் கழிவறைகளில் பாதுகாப்பு இருமடங்காக உயர்த்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டிலேயே முதன்முறையாக இதுபோன்ற நடவடிக்கைகள் சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: கால்களால் இயக்கப்படும் லிஃப்ட்: சென்னை மெட்ரோ சோதனை முயற்சி