ETV Bharat / state

தமிழ்நாட்டில் 491 டன் குட்கா, பான்பராக் பறிமுதல் - மா சுப்பிரமணியன் - மாநில அளவிலான உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்களுக்கான பயிலரங்கம்

தமிழ்நாட்டில் 491 டன் குட்கா, பான்பராக் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் தகவல் தெரிவித்துள்ளார்.

food safety department  Ministry of Health and Family Welfare  Ministry of Health and Family Welfare ma subramanian  ma subramanian talks about gutka  மா சுப்பிரமணியன்  தமிழ்நாட்டில் குட்கா பறிமுதல்  மாநில அளவிலான உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்களுக்கான பயிலரங்கம்  உணவு பாதுகாப்புத்துறை
தமிழ்நாட்டில் குட்கா பறிமுதல்
author img

By

Published : Mar 25, 2022, 2:06 PM IST

சென்னை: மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்ரமணியன், இன்று (மார்ச் 25) தியாகராயர் நகரில் மாநில அளவிலான உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்களுக்கான பயிலரங்கினைத் தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், பொதுசுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்து துறை இயக்குநர் செல்வவிநாயகம், உணவு பாதுகாப்புத்துறை இயக்குநர் மற்றும் கூடுதல் ஆணையர் சேரன் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் பேசிய மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன், “உணவு பாதுகாப்பு மற்றும் தரநிர்ணய சட்டம்-2006, நாடு முழுவதும் 5-8-2011 முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. மாநில அளவில் உணவு பாதுகாப்புத்துறை இந்தச் சட்டத்தை அமல்படுத்துகிறது.

சென்னை, தஞ்சாவூர், மதுரை, சேலம், கோயம்புத்தூர் மற்றும் பாளையங்கோட்டை ஆகிய இடங்களிலுள்ள ஆறு உணவு ஆய்வகங்களில் உணவு மாதிரிகள் பரிசோதனை செய்யப்படுகின்றன. இவை அரசு புகையிலை மற்றும் நிக்கோட்டின் கலந்த உணவுப்பொருட்களை தடை செய்வதை முக்கிய பணியாக கருதுகிறது.

மே 2021 முதல் பிப்ரவரி 2022 வரை தடை செய்யப்பட்ட குட்கா, பான்பராக் உள்ளிட்ட புகையிலை பொருட்கள் 91 டன் உணவு பாதுகாப்பு அலுவலர்களால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதேபோன்று காவல்துறையினரால் 400 டன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை தயாரித்த, விற்பனை செய்த தயாரிப்பு நிறுவனங்கள் மற்றும் விற்பனை நிலையங்களுக்கு பிப்ரவரி 2022 வரை அவசர தடையாணை உத்தரவு வழங்கப்பட்டுள்ளது” எனப் பேசினார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், “தடை செய்யப்பட்ட பொருட்களை உற்பத்தி செய்த 9 நிறுவனங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. பான்பராக், குட்கா விற்பனையை தீவிரமாக கண்காணித்த கார்ணமாக இந்த துறை சார்பில் 91 டன் இந்தத் துறை வழங்கிய தகவல் அடிப்படையில் 400 டன் என் மொத்தம் 491 டன் குட்கா, பான்பராக் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலமாக 9 கடைகளுக்கு தடை ஆணைபலருக்கு சிறை தண்டனை பெற்று தரப்பட்டுள்ளது.

வீணாகும் கைபடாத உணவுகளை பெற்று தேவைப்படும் மக்களுக்கு வழகியதில் 15,845 நிகழ்வுகள் மூலமாக லட்சக்கணக்கானோர் பயன் பெற்றுள்ளனர். தேசிய நல வாழ்வு குழும திட்ட அலுவலகத்தில் உதவியாளரான திருநங்கை தமிழ்செல்விக்கு, இந்த நிகழ்வில் பணி நியமன ஆணை வழங்கப்பட்டது” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: வருமான சரிவை சீர் செய்ய சீர்திருத்தம் தேவை: நிதி அமைச்சர்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.