சென்னை விமான நிலையத்தில் இருந்து இன்று (அக்.14) பிற்பகல் 2.15 மணிக்கு மகாராஷ்டிர மாநிலம் சீரடி செல்வதற்காக ஸ்பைஸ்ஜெட் விமானம் புறப்பட்ட தயாராக இருந்தது. இதில் செல்லவிருந்த 163 பயணிகள் டிக்கெட் பரிசோதனை முடிந்து விமானத்தில் ஏற தயாராக இருந்தனர்.
இந்நிலையில் சீரடியில் வானிலை சரியில்லாத காரணத்தால் 2.15 மணிக்கு புறபட வேண்டிய விமானம் ரத்து செய்யப்படுவதாக விமான நிலைய அலுவலர்கள் தெரிவித்தனர்.
இதனையடுத்து விமானநிலைய அலுவலர்களுடன் பயணிகள் அனைவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது அலுவலர்கள் சீரடியில் வானிலை சீரான பின் மீண்டும் விமானம் இயக்கப்படும் என தெரிவித்தனர். இதனையடுத்து விமான நிலையத்தில் உள்ள அறைகளில் பயணிகள் தங்க வைக்கப்பட்டனர்.
இதையும் படிங்க: பண்டிகை கால தொடா் விடுமுறை: உள்நாட்டு விமான சேவை டிக்கெட் கட்டணம் உயர்வு