ETV Bharat / state

தமிழ்நாட்டிற்கு முதல் ஆக்ஸிஜன் ரயில் வருகை! - First oxygen rail reached chennai today

மேற்குவங்க மாநிலத்திலிருந்து 80 மெட்ரிக் டன் ஆக்ஸிஜனுடன் சிறப்பு ரயில் இன்று (மே.14) அதிகாலை சென்னை வந்தடைந்தது.

oxygen rail
ஆக்ஸிஜன் ரயில்
author img

By

Published : May 14, 2021, 12:02 PM IST

Updated : May 14, 2021, 9:03 PM IST

தமிழ்நாட்டில் மருத்துவ ஆக்ஸிஜனுக்குத் தட்டுபாடு ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில், மேற்கு வங்க மாநிலம், துர்காபூரில் இருந்து 80 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் கொண்ட 4 கண்டெய்னர்களுடன் சிறப்பு ஆக்ஸிஜன் விரைவு ரயில், இன்று அதிகாலை சென்னை தண்டையார்பேட்டை கண்டெய்னர் முனையத்துக்கு வந்தடைந்தது.

நாடு முழுவதும் ஆக்ஸிஜன் ரயில் இயக்கப்பட்டு வரும் நிலையில், தமிழ்நாட்டிற்கு வந்த முதல் ஆக்ஸிஜன் விரைவு ரயில் இதுவாகும்.

மேற்கு வங்கத்திலிருந்து வந்த முதல் ஆக்சிஜன் ரயில்!
இந்த ஆக்ஸிஜன் கண்டெய்னர்கள் ரயிலில் இருந்து பாதுகாப்பாக இறக்கி வைக்கப்பட்டதாக, ரயில்வே அலுவலர்கள் தெரிவித்தனர். சென்னைக்கு வந்த ரயிலை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் வரவேற்றனர்.
தமிழ்நாடு அரசு முன்வைத்த கோரிக்கையின் அடிப்படையில், இந்த சிறப்பு ஆக்ஸிஜன் விரைவு ரயில் இயக்கப்படுவதாகத் தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.

Last Updated : May 14, 2021, 9:03 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.