பணியின் போது உயிர் நீத்த காவல்துறையினர் தியாகத்தை நினைவு கூறும் வகையில் நாடு முழுவதும் அக்டோபர் 21ஆம் தேதி காவலர் வீரவணக்க நாள் அனுசரிக்கப்படுகிறது.
சென்னை காவல் துறையில் 31ஆம் தேதி வரை 10 நாள்களுக்கு காவலர் வீரவணக்க நாள் அனுசரித்து, உயிரிழந்த காவல்துறையினர் உருவ படங்களுடன் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளன.
இதுதொடர்பாக சென்னை மத்திய கைலாஷில் நடந்த நிகழ்வில் செய்தியாளர்களை சந்தித்த காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால், "நாடு முழுவதும் இந்தாண்டு 268 காவல் துறையினர் உயிரிழந்துள்ளனர்.
சென்னையில் மட்டும் 28 பேர் உயிரிழந்துள்ளனர். பணியின் போது உயிரிழந்த காவல் துறையினர் குடும்பத்திற்கு நிவாரணம், வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி போன்ற நடவடிக்கைகள் அரசால் எடுக்கப்பட்டு வருகிறது என்று தெரிவித்தார்.
பின்னர், விஜய்சேதுபதி மகளுக்கு பாலியல் வன்கொடுமை மிரட்டல் வழக்கு தொடர்பான கேள்விக்கு, “விசாரணை தீவிரமாக நடைபெற்று வருவதாகவும், இது போன்று சமூக வலைதளங்களில் குழந்தைகள் குறித்து ஆபாசமாக பதிவிடும் நபர்களை கண்காணிக்க மத்திய, மாநில அளவிலான அமைப்புகள் இயங்கி வருவதால், அந்த அமைப்புகளிடம் இருந்து வரும் புகார்களில் காவல் துறை உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” எனப் பதிலளித்தார்.
இதையும் படிங்க: வெங்காயம் விலையேற்றம் 2 மாத காலம் நீடிக்க வாய்ப்பு: வியாபாரிகள்