ETV Bharat / state

Vani Jayaram: பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம் காலமானார்! - வாணி ஜெயராம் காலமானார்

இந்திய சினிமாவில் 10ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்கள் பாடியுள்ள மூத்த பின்னணி பாடகி வாணி ஜெயராம் (78) சென்னையில் அவரது வீட்டில் மர்மமான முறையில் உயிரிழந்தார்.

Vani Jayaram: பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம் காலமானார்!

author img

By

Published : Feb 4, 2023, 2:43 PM IST

Updated : Feb 4, 2023, 4:43 PM IST

பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம் காலமானார்

சென்னை: நுங்கம்பாக்கம், ஹாடோஸ் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த புகழ்பெற்ற பின்னணி பாடகி வாணி ஜெயராம் (78) காலமானார். இவர் கடந்த 10 ஆண்டுகளாக இந்த அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி குழந்தை இல்லாத நிலையில் இவரது கணவர் ஜெயராம் கடந்த 2018ஆம் ஆண்டு உடல் நலக்குறைவால் காலமானார். அதன் பின் வாணி ஜெயராம் வீட்டில் தனியாக வசித்து வந்தார்.

இவர் 1945 ஆம் ஆண்டு தமிழகத்தின் வேலூரில் பிறந்தவர். இவருக்கு பெற்றோர் வைத்த பெயர் கலைவாணி ஆகும். சிறுவயதிலேயே இசையின் மீது மிகுந்த ஆர்வம் கொண்ட இவர் கிட்டத்தட்ட 50 ஆண்டுகளாக தன்னுடைய இனிமையான குரலால் வானுயர வளர்ந்து நிற்பவர். இவர், டி.ஆர். பாலசுப்ரமணியம், ஆர்.எஸ். மணி ஆகியோரிடம் கர்நாடக இசையைப் பயின்றவர்.

வானொலியில், ஒலிபரப்பாகும் பாடல்களைக் கேட்டுக் கேட்டு தானும் ஒரு பாடகியாக வேண்டும் என்கிற ஆசையை மனதில் வைத்து அதன்படி சாதித்தும்காட்டியவர். இசை மீது வாணி ஜெயராமுக்கு இருந்த தீரா காதல் இவரை இந்திய அளவில் புகழ்மிக்க பாடகியாக மாற்றியது. ஒரு பெண்ணின் வெற்றிக்குப் பின்னர் ஒரு ஆண் இருப்பர் என்பது வாணி ஜெயராம் விஷயத்தில் 100 சதவீதம் உண்மை. மனைவியின் பாடகி ஆசையை நிறைவேற்றப் பக்க பலமாய் நின்றார் அவரின் கணவர் ஜெயராம். 1971-ம் வருடம் வெளிவந்த ‘குட்டி’ (GUDDI) என்ற இந்திப் படத்தில், வசந்த் தேசாயின் இசையில் ‘போலே ரே பப்பி ஹரா’ என்ற ‘பாடலைப் பாடி திரையுலகில் பின்னணிப் பாடகியாக அறிமுகமானார் வாணி ஜெயராம்.

இவரது முதல் பாடலே அமோக வரவேற்பைப் பெற்றதைத் தொடர்ந்து, இசையமைப்பாளர்களால் தேடப்படும், முன்னணி பாடகியாக உருவெடுத்தார். ஹிந்தியைத் தொடர்ந்து, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், துளு, குஜராத்தி, ஒடியா, பெங்காலி என 10க்கும் மேற்பட்ட மொழிகளில் பாடல்களை பாடி பிரபலமானார். வாணி ஜெயராம் தமிழில் 1973 தாயும் சேயும் என்ற படத்தின் மூலம் பின்னணி பாடகியாக அறிமுகமானார்.

1974-ல் தீர்க்கசுமங்கலி ௭ன்ற திரைப்படத்தில் இவர் பாடிய ”மல்லிகை என் மன்னன் மயங்கும்” பட்டிதொட்டியெங்கும் இவரது புகழை பரவச் செய்தது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, மராத்தி, ஒடியா, குஜராத்தி மற்றும் பெங்காளி ௭ன 19 மொழிகளில் 1000 படங்களில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். கே.வி.மகாதேவன், எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்ட பல்வேறு இசையமைப்பாளர்களுடன் பணியாற்றியுள்ளார்.

வாணி ஜெயராம் சிறந்த பின்னணி பாடகிக்கான விருதை மூன்று முறை பெற்றுள்ளார். குறிப்பாக வாணி ஜெயராம் 1975 ஆம் ஆண்டு அபூர்வ ராகங்கள் படத்தில் பாடிய ஏழு ஸ்வரங்களுக்குள் என்ற பாடலுக்காகச் சிறந்த பின்னணி படகிக்கான தேசிய விருதை பெற்றார். இதை தொடர்ந்து தெலுங்குப் பட பாடலுக்காகவும் இரண்டு தேசிய விருதுகளை பெற்றுள்ளார். மேலும் இவர் தமிழ்நாடு, ஆந்திரா, மகாராஷ்டிரா, கேரளா, குஜராத், ஒடிசா ஆகிய மாநிலங்களின் விருது, நந்தி விருது என பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார்.

இந்நிலையில் இவர் நேற்று இரவு வீட்டை உள்பக்கமாகப் பூட்டிக்கொண்டு உறங்கிய நிலையில், வாணி ஜெயராம் வீட்டில் வேலை பார்த்து வரும் மலர்கொடி என்ற பெண்மணி இன்று காலை சுமார் 11 மணியளவில் வழக்கம் போல பணிக்காக வந்த அவர் பல முறை கதவை தட்டியும் திறக்காததால், உடனே ஆழ்வார்பேட்டையில் வசித்து வரும் வாணி ஜெயராமின் தங்கை உமாவிடம் தகவல் தெரிவித்துள்ளார்.

விரைந்து வந்த உமா அவரிடம் இருந்த வேறு சாவியை கொண்டு வீட்டை திறந்து பார்த்த போது பார்த்த போது வாணி ஜெயராம் தரையில் மயங்கிய நிலையில் விழுந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்து உடனே ஆயிரம் விளக்கு போலீசாருக்கு தகவல் அளித்துள்ளார். அங்கு வந்த போலீசார் வாணி ஜெயராமை சோதித்து பார்த்த போது அவர் உயிரிழந்தது தெரியவந்தது.

போலீசார் உடனே அவரது உடலை மீட்டு ஓமந்தூரார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து போலீசார் சந்தேக மரணம் என்ற பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வாணி ஜெயராம் வழுக்கி விழுந்து தலையில் அடிப்பட்டு உயிரிழந்தாரா அல்லது வேறு காரணமா என பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்னரே இறப்பிற்கான காரணம் தெரியவரும் என போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திரையுலகில் தனக்கென தனி இடம் பிடித்திருக்கும் வாணி ஜெயராமிற்கு 2023 குடியரசு தினத்தையொட்டி ”பத்ம பூஷன்” விருது அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி… மாவீரன் படக்குழு வெளியிட்ட வீடியோ!

Last Updated : Feb 4, 2023, 4:43 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.