ETV Bharat / state

முன்னாள் அமைச்சர் மணிகண்டனின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு

author img

By

Published : Jul 5, 2021, 9:24 PM IST

சென்னை: முன்னாள் அமைச்சர் மணிகண்டனின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளது.

Ex minister manikandan bail case  adjourned

துணை நடிகை அளித்த பாலியல் புகாரின் பேரில், முன்னாள் அமைச்சர் மணிகண்டனை, அடையாறு அனைத்து மகளிர் காவல்துறையினர் ஜூன் 20ஆம் தேதி கைது செய்தனர்.

சிறையில் அடைக்கப்பட்ட அவர் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனு, நீதிபதி நிர்மல்குமார் முன்பு இன்று (ஜூலை 5) விசாரணைக்கு வந்தது.

அப்போது, மணிகண்டன் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கே.எஸ். தினகரன், முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு திருமணமாகி, குழந்தைகள் உள்ளன என்பது தெரிந்தே, ஐந்து ஆண்டுகள் அவருடன் நடிகை இருந்துள்ளார்.

அதனால் பாலியல் வன்கொடுமை என்ற கேள்வியே எழவில்லை. கருக்கலைப்புக்கு நடிகையே ஒப்புதல் அளித்துள்ளார்.

கருக்கலைப்புக்கு கட்டாயப்படுத்தியதாகக் கூற முடியாது. எந்த அந்தரங்கப் படங்களையும் வெளியிடவில்லை. புலன் விசாரணை முடிந்துவிட்டது. ஒப்புதல் வாக்குமூலம் பெறப்பட்டது. காவலில் வைத்தும் விசாரிக்கப்பட்டுள்ளார்.

தலைமறைவாகப் போவதில்லை. சாட்சிகளை கலைக்கப் போவதில்லை என்றார்.

நடிகை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மனைவியை விவாகரத்து செய்துவிட்டு, திருமணம் செய்து கொள்வதாகக் கூறியதால், அவருடன் கணவன் - மனைவியாக வாழத் தொடங்கியுள்ளார். சட்டப்பேரவைக்கும் மனைவி எனக் கூறி மனுதாரரை அழைத்துச் சென்றதாகவும் தெரிவிக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மணிகண்டனை காவலில் வைத்து விசாரணை நடத்தியதில் அவரது ஒரு செல்போன் கண்டுபிடிக்கப்பட்டபோதும், நடிகைக்கு படங்களும், குறுந்தகவலும் அனுப்பப் பயன்படுத்தப்பட்ட செல்போன் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.

செல்வாக்கான நபர் என்பதால், சாட்சிகளை கலைக்கக்கூடும் என்பதால், அவருக்கு ஜாமீன் வழங்கக்கூடாது என வாதிடப்பட்டது.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, மணிகண்டனின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.