ETV Bharat / state

10 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 10am

author img

By

Published : May 26, 2020, 10:05 AM IST

ஈடிவி பாரத்தின் 10 மணி செய்திச் சுருக்கம் இதோ...

etv-bharat-top10-news-10-am
etv-bharat-top10-news-10-am

2021இல் அமெரிக்க பொருளாதாரம் வேற லெவல் - ட்ரம்ப்

வாஷிங்டன்: அமெரிக்கப் பொருளாதாரம் 2021ஆம் ஆண்டு மிகப்பெரிய வளர்ச்சியை அடையும் என்று அந்நாட்டு அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

ஊரடங்கு விதிகளை மீறியதால் மன்னிப்புக்கோரிய ஆஸ்திரிய அதிபர்

வியன்னா: கரோனா ஊரடங்கு விதிகளை மீறியதால், ஆஸ்திரிய அதிபர் அலெக்சாண்டர் வேன் தெர் பில்லென் மனம் வருந்தி, மக்களிடம் மன்னிப்புக் கோரியுள்ளார்.

இந்திய - சீன உரசல்: பின்னணியில் உள்ள 10 காரணிகள்

டெல்லி: இந்திய எல்லைப் பகுதியில் சீன ராணுவம் குவிக்கப்பட்டதையடுத்து பதற்றமான சூழல் நிலவுகிறது. இது தொடர்பாக மூத்த செய்தியாளர் சஞ்ஜிப் கே. பருவா எழுதியுள்ள சிறப்புக் கட்டுரையின் தமிழாக்கம் இதோ...

சென்னையில் 2ஆவது நாளாக 39 விமான சேவைகள் இயக்கம்

சென்னை விமான நிலையத்தில் இரண்டாவது நாளாக இன்று 39 உள்நாட்டு விமான சேவைகள் இயக்கப்படுகின்றன.

புத்தகங்களைத் தானம் வழங்க புதிய செயலி 'PUSTAK'!

லூதியானா (பஞ்சாப்): நாடு தழுவிய ஊரடங்குக்கு மத்தியில் பல குழந்தைகள் உரிய புத்தகங்கள் இல்லாமல் சிரமப்படுவதால், பஞ்சாபின் லூதியானாவைச் சேர்ந்த பள்ளி மாணவி 'PUSTAK' என்ற செயலி ஒன்றை உருவாக்கியுள்ளார்.

தாயைக் காண விமானத்தில் தனியாகப் பயணித்த 5 வயது சிறுவனின் பாசம்!

பெங்களூரு: ஊரடங்கு காரணமாக நிறுத்தப்பட்டிருந்த விமான சேவை இன்றுமுதல் தொடங்கப்பட்டதால், ஐந்து வயது சிறுவன் டெல்லியிலிருந்து தனியாக விமானத்தில் பயணித்து, தனது தாயைப் பார்க்க பெங்களூரு வந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

TTD (டி.டி.டீ) நில விற்பனைக்கு தடைவிதித்து அரசாணை வெளியிட்டது ஆந்திர அரசு

திருமலை திருப்பதி கோயிலின் நில விற்பனை விவகாரத்தில் நாட்டிலுள்ள பல்வேறு தரப்பினரிடையே எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, பக்தர்களின் உணர்வைக் கருத்தில்கொண்டு இந்த முடிவை மறுபரிசீலனை செய்வதற்கான முடிவு எடுக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து நில விற்பனைக்கு தடைவிதித்து அரசாணை வெளியிட்டுள்ளது ஆந்திர அரசு.

'ஆக்ஸ்போர்டு கண்டறிந்த கோவிட் -19 தடுப்பூசி வெற்றிபெற 50% மட்டுமே வாய்ப்பு'

லண்டன்: கரோனா வைரஸ் (தீநுண்மி) தொற்றைத் தடுக்க, ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் கண்டுபிடித்த தடுப்பூசி வெற்றிபெற 50 விழுக்காடு மட்டுமே வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ஸ்பேஸ்-எக்ஸ் முதல் ராக்கெட் ஏவுதல் வரை... விண்வெளி பயணத்தின் பாணியை உடைக்கும் முயற்சி!

வாஷிங்டன்: ஸ்பேஸ்-எக்ஸ் ராக்கெட்டில் செல்லவிருக்கும் விண்வெளி வீரர்களின் உடைகளில் பல்வேறு புதிய பாதுகாப்பு அம்சங்கள் வழங்கியதன் மூலம், விண்வெளிப் பயணத்துக்கான பாணியை உடைக்கும் முயற்சி நடைபெற்றுவருகிறது.

விராட், ஸ்டீவ் ஸ்மித், ஜோ ரூட் ஆகியோருக்கு இணையான வீரர் பாபர்!

லாகூர்: விராட் கோலி, ஸ்டீவ் ஸ்மித், ஜோ ரூட் ஆகியோருக்கு இணையான வீரர் பாபர் அஸாம் என பாகிஸ்தான் பயிற்சியாளர் மிஸ்பா உல் ஹக் தெரிவித்துள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.