'முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்'
சென்னை: கரோனா தடுப்பூசியின் முக்கியத்துவம் குறித்தும், தொற்றின் தீவிரத்தை உணர்ந்து 18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் தவறாமல் தடுப்பூசி செலுத்திக்கொள்ளுமாறு தமிழநாடு மக்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மே 1 முதல் ஆசிரியர்கள் பள்ளிகளுக்கு வர தேவையில்லை - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!
சென்னை: அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் மே 1 ஆம் தேதி முதல் பள்ளிக்கு வரத் தேவையில்லை எனவும், ஆனாலும் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு தகவல் தொழில்நுட்பத்தினை பயன்படுத்தி தொடர்ந்து கற்பிக்கும் செயல்பாட்டினை மேற்கொள்ள வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
இருசக்கர வாகனங்கள் திருட்டு: சிறுவர்கள் உள்பட 4 பேர் கைது!
ஈரோடு: இருசக்கர வாகங்கள், செல்போன் ஆகியவற்றை திருடிய சிறுவர்கள் உள்ளிட்ட 4 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.
ரயில் மூலம் ஆக்சிஜன் - தமிழ்நாடு அரசிடம் இருந்து கோரிக்கை வரவில்லை - தெற்கு ரயில்வே
ரயில் மூலம் ஆக்சிஜன் கொண்டு செல்வது தொடர்பாக தமிழ்நாடு அரசிடமிருந்து கோரிக்கை வரவில்லை என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது
'அரசியலைக் கடந்து கரோனாவைக் கட்டுப்படுத்த ஒத்துழைப்பு அளிப்போம்' அண்ணாமலை!
அரசியலுக்கு அப்பாற்பட்டு கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த அனைவரும் ஒத்துழைப்பு அளிப்போம் என, பாஜக வேட்பாளர் அண்ணாமலை கூறியுள்ளார்.
நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டும் இயற்கை மருந்துகள் - அறிமுகம் செய்தார் ஆட்சியர்
சேலம்: கரோனா காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் சோனா ஆயுஷ் மையத்தின் இயற்கை மருந்துப் பொருள்களை சேலம் மாவட்ட ஆட்சியர் இன்று (ஏப். 28) அறிமுகம் செய்துவைத்தார்.
' வாக்கு எண்ணிக்கைக்கு தடை கோரி வழக்கு': புதிய தமிழகம் கட்சி
சென்னை: மே 2ஆம் தேதி நடைபெறவுள்ள வாக்கு எண்ணிக்கைக்கு தடை விதிக்கக்கோரி புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
புகழ்பெற்ற எழுத்தாளர் மனோஜ் தாஸ் காலமானார்; பிரதமர் இரங்கல்
இருபதாம் நூற்றாண்டின் முக்கிய ஒரிய எழுத்தாளரான மனோஜ் தாஸ் உடல்நலக் குறைவால் நேற்று (ஏப்.28) இரவு காலமானார்.
தமிழ்நாடு ஆளுநருடன் தலைமைச் செயலர், டிஜிபி சந்திப்பு
சென்னை: கரோனா பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில், தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை தலைமைச் செயலர் ராஜீவ் ரஞ்சன், காவல் துறைத் தலைவர் ஜே.கே. திரிபாதி உள்ளிட்ட உயர் அலுவலர்கள் இன்று மாலை சந்திக்கின்றனர். இதில், கட்டுப்பாடுகள், பொதுமுடக்கம் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என தெரிகிறது.
பருத்தியைத் தாக்கும் பூஞ்சைகள்... அலுவலர்கள் வரவை எதிர்பார்க்கும் விவசாயிகள்!
திருவாரூர்: கோடை கால பயிராகப் பருத்தி சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் பூச்சி தாக்குதல், பூஞ்சை தாக்குதலால் சிரமப்பட்டு வரும் நிலையில், வேளாண் அலுவலர்கள் தங்களுக்கு உதவ முன்வருமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.