சசிகலா நியமனம் ரத்து வழக்கை ஒத்தி வைத்து உத்தரவு
அதிமுக பொதுக்குழு கூட்டத்தை செல்லாது என அறிவிக்க கோரி சசிகலா தொடர்ந்த வழக்கை சென்னை மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் ஜூன் மாதத்திற்கு தள்ளிவைத்துள்ளது.
'கரோனா பரவலைக் கட்டுப்படுத்த புதிய உத்திகளை கையாள்க'- ராமதாஸ்
சென்னை: தமிழ்நாட்டில் தொற்று பரவலைக் கட்டுப்படுத்தாவிட்டால் நிலைமை மிகவும் மோசமாகிவிடும். இதை உணர்ந்து புதிய உத்திகளையும் தமிழ்நாடு அரசு செயல்படுத்த வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
பொய் புகார் அளிக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மனு!
ஈரோடு: பொய் புகார் கொடுக்கும் நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி கரூர் சாலை மக்கள் நலச்சங்கத்தினர் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.
`முழு ஊரடங்கு நாளில் கணினி முன்பதிவு மையங்கள் இயங்காது`- தென்னக ரயில்வே அறிவிப்பு!
சென்னை: ஏப்ரல் 25 ஆம் தேதியன்று பயணிகள் முன்பதிவு மையங்கள் இயங்காது என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
80 கோடி பேருக்கு 5 கிலோ உணவு தானியங்கள் இலவசம் - மத்திய அரசு
கரோனா பரவல் காரணமாக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், நாடு முழுவதும் 80 கோடி பேருக்கு 5 கிலோ உணவு தானியங்கள் இலவசமாக வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
கரோனா சிகிச்சைக்கு மேலும் ஒரு மருந்தை பயன்படுத்த மத்திய அரசு அனுமதி
இந்தியாவில் கரோனாவின் இரண்டாவது அலை தீவிரமடைந்துள்ளது. நாடு முழுவதும் இதுவரை 13 கோடியே 54 லட்சத்து 78 ஆயிரத்து 420 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
சொத்துக் குவிப்பு வழக்கு: சிறைத் தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரி அதிமுக முன்னாள் எம்எல்ஏ., மேல்முறையீடு!
சென்னை: சொத்துக் குவிப்பு வழக்கில் விதிக்கப்பட்ட நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனையை எதிர்த்து, அதிமுக முன்னாள் எம்எல்ஏ., பரமசிவம் தாக்கல் செய்த மனுவுக்கு லஞ்ச ஒழிப்புத்துறை பதிலளிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆக்ஸிஜன், வென்டிலேட்டர்கள் தேவை, இருப்பு குறித்த அறிக்கைத் தாக்கல் செய்ய புதுச்சேரி அரசுக்கு உத்தரவு!
சென்னை: புதுச்சேரி யூனியன் பிரதேசத்திலுள்ள அரசு, தனியார் மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன், வென்டிலேட்டர்கள், ரெம்டெசிவிர் மருந்துகள், தடுப்பூசி இருப்பு மற்றும் தேவை குறித்த விவரங்களை விரிவான அறிக்கையாகத் தாக்கல் செய்ய அம்மாநில தலைமைச் செயலாளருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேற்கு வங்கத்திற்கான ஆக்ஸிஜன் உ.பிக்கு செல்கிறது - மம்தா குற்றச்சாட்டு
மேற்கு வங்க மாநிலத்திற்கான ஆக்ஸிஜனை உத்தரப் பிரதேசத்திற்கு மத்திய அரசு திசை திருப்பிவிடுவதாக மம்தா பானர்ஜி குற்றஞ்சாட்டியுள்ளார்.
புதுச்சேரியில் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு - நள்ளிரவு முதல் அமல்!
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. நள்ளிரவு முதல் இந்த உத்தரவு அமலுக்குவரும் நிலையில், வழக்கம்போல் பொது போக்குவரத்து இயங்க எவ்விதத் தடையும் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.