ETV Bharat / state

5 மணி செய்தி சுருக்கம் Top 10 news @ 5pm

author img

By

Published : Jul 26, 2021, 4:50 PM IST

ஈடிவி பாரத்தின் 5 மணி செய்தி சுருக்கம்

5 மணி செய்தி சுருக்கம்
5 மணி செய்தி சுருக்கம்

நம்பி நாராயணன் துன்புறுத்தப்பட்ட வழக்கு: சிபிஐ விசாரணைக்கு எஸ் சொன்ன உச்ச நீதிமன்றம்

1994ஆம் ஆண்டு இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன்(79) உளவு பார்த்ததாக காவல் துறையினரால் குற்றம்சாட்டப்பட்டு, கைது செய்யப்பட்டார். இது அவர் மீது சுமத்தப்பட்டது வீண் பழி என முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி டி.கே. ஜெயின் தலைமையிலான கமிட்டி அரசிடம் அறிக்கை சமர்ப்பித்தது. இந்நிலையில் அறிக்கையின் அடிப்படையில் வழக்குத்தொடர முடியாது என்றும், மீண்டும் இதனை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.

ஒலிம்பிக்கில் பங்கேற்ற தமிழ்நாடு வீரர்களுக்கு அரசு வேலை- அமைச்சர் மெய்யநாதன்

சென்னை: ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றுள்ளவர்களில் தனலட்சுமி, சுபா வெங்கடேசன் ஆகியோருக்கு அரசு வேலை வழங்கப்படும் என விளையாட்டுத் துறை அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார்.

மீராபாய் வெள்ளி தங்கமாக வாய்ப்பு!

டோக்கியோ ஒலிம்பிக்கில் வெள்ளி பதக்கம் வென்ற மீராபாய் சானுவுக்கு தங்க பதக்கம் கிடைக்க வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளன.

பிரதமருடன் ஓபிஎஸ் - ஈபிஎஸ் சந்திப்பு

டெல்லியில் பிரதமர் மோடியை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இன்று (ஜூலை. 26) சந்தித்து பேசினர்.

திமுகவிற்கு எதிராக போராட்டம் நடத்துவோம் - கே.பாலகிருஷ்ணன்

கெயில் எரிவாயு குழாய் பதிப்பு திட்டம் மக்களின் வாழ்வாதாரத்தை பாதித்தால் திமுகவிற்கு எதிராக போராட்டம் நடத்துவோம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

மீனவர்களுக்கு எச்சரிக்கை - சென்னை வானிலை மையம்

பலத்த காற்று காரணமாக மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கைதான முன்னாள் ஐஜி மகன் மருத்துவமனையில் அனுமதி

மனைவிக்கான இழப்பீட்டுத் தொகையைக் கொடுக்க மறுத்ததாகக் கைதான முன்னாள் ஐஜி அருளின் மகன் மைக்கேல் அருள் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஒன்றிய அரசு என்றுதான் புத்தகங்களில் இருக்கும் - அமைச்சர் பொன்முடி

கல்லூரி பாட புத்தகங்களில் மத்திய அரசு என்பதற்கு பதிலாக ஒன்றிய அரசு என்றே இருக்கும் என தமிழ்நாடு உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

கரோனா களப்பணியாற்றியவர்களுக்கு ஊதியம் வழங்கவில்லை

கரோனா களப்பணியாற்றியவர்களுக்கு இதுநாள்வரை ஊதியம் வழங்கப்படவில்லை என மாவட்ட ஆட்சியரிடம் இன்று மனு அளித்தனர்.

இலங்கையிலிருந்து இங்கிலாந்து பறக்கும் இரண்டு இந்திய வீரர்கள்

இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் சுப்மன் கில், வாஷிங்டன் சுந்தர், ஆவேஷ் கான் ஆகியோர் காயம் காரணமாக விலகியுள்ள நிலையில், இவர்களுக்கு பதிலாக சூர்யகுமார், பிருத்வி ஷா ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.