காஞ்சி சட்டப்பேரவைத் தொகுதிகளில் போட்டியிட 142 வேட்புமனு தாக்கல்
காஞ்சிபுரம்: உத்திரமேரூர், ஸ்ரீபெரும்புதூர் (தனி), காஞ்சிபுரம், ஆலந்தூர் ஆகிய நான்கு தொகுதிகளில் போட்டியிட 142 வேட்புமனுக்கள் தாக்கல்செய்யப்பட்டன.
தனக்குப் பின்னால் வந்த வேட்பாளரை அழைத்ததால் இந்து முன்னணி வேட்பாளர் தர்ணா!
மயிலாடுதுறை: கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு வேட்புமனு தாக்கல் செய்யவந்த இந்து மக்கள் கட்சி வேட்பாளர், தனக்குப் பின்னால் வந்த வேட்பாளரை மனு தாக்கல்செய்ய அழைத்ததால் தேர்தல் அலுவலர் அறையின் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
டீசல் விலை உயர்வைக் கண்டித்து மீனவர்கள் கறுப்புக் கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்!
ராமநாதபுரம்: டீசல் விலை உயர்வைக் கண்டித்து தொண்டி அருகே மீனவர்கள், படகுகளில் கறுப்புக் கொடி கட்டியும் கையில் ஏந்தியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
உணவக பார்சலில் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு!
கன்னியாகுமரி: வாக்களிப்பதன் அவசியம் குறித்து தனியார் உணவகங்களில் வாங்கப்படும் பார்சலில் விழிப்புணர்வு ஒட்டு வில்லை ஒட்டப்பட்டு வழங்குவதை மாவட்டத் தேர்தல் அலுவலர் தொடங்கிவைத்தார்.
வியாசர்பாடியில் அமமுக பிரமுகருக்கு அரிவாள் வெட்டு- போலீஸ் விசாரணை
ரத்த வெள்ளத்தில் இருந்த இருவரையும் அக்கம் பக்கத்தில் மீட்டு அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்து காவலருக்கு தகவல் தெரிவித்தனர். இந்தத் தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த வியாசர்பாடி காவலர்கள் சிசிடிவி கேமராவின் காட்சிகளை கொண்டு தாக்குதலில் ஈடுபட்ட நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
'உங்க பின்னாடியே வரணுமா' - கமலிடம் பெண் எழுப்பிய கேள்வி
கோவை: அம்மன்குளம் பகுதியில் கமல் ஹாசன் ஆய்வு மேற்கொண்டபோது பெண் ஒருவர் தொண்டர்கள் முன்பு கடுமையாகப் பேசினார்.
'நாங்க ஜெயிக்க நாடார் ஓட்டே போதும்' - ஹரி நாடாருடன் சிறப்பு நேர்காணல்
"நான் வெற்றிப் பெற நாடார் சமுதாய மக்களின் வாக்குகளே போதும்" என்று ஆலங்குளம் சட்டப்பேரவைத் தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிடும் பனங்காட்டுப் படை கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஹரி நாடார், ஈ டிவி பாரத்திற்கு அளித்த பிரத்யேக பேட்டியில் உறுதிபட தெரிவித்துள்ளார்.
இது திராவிட மண், மோடி மஸ்தான் வேலை எல்லாம் இங்குப் பலிக்காது - ஸ்டாலின்
'இது திராவிட மண், மோடி மஸ்தான் வேலை இங்குப் பலிக்காது. இது தமிழ்நாட்டின் சுயமரியாதைக்கு நடத்தப்படும் தேர்தல்' எனக் கோயம்புத்தூரில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.
திமுக தேர்தல் அறிக்கையைத் தவிடுபொடியாக்கிய அதிமுகவின் 'ஆண்டுக்கு 6 சிலிண்டர்'!
கச்சா எண்ணெய் விலை சந்தையில் உயர்ந்துவருவதால் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்ந்துவருகிறது. இதைக் கருத்தில்கொண்டு ஆண்டுக்கு ஆறு சமையல் எரிவாயு உருளை இலவசமாக வழங்கப்படும் என அதிமுக தேர்தல் அறிக்கையில் வெளியிட்டு திமுகவின் தேர்தல் அறிக்கையைத் தவிடுபொடி ஆக்கியுள்ளது.
ராஜ்நாத் சிங்- லாயிட் ஆஸ்டின் இன்று சந்திப்பு!
பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், அமெரிக்கப் பாதுகாப்புச் செயலாளர் லாயிட் ஆஸ்டினை இன்று (மார்ச் 20) சந்தித்துப் பேசுகிறார்.