ETV Bharat / state

பெற்றோர் சண்டையால் மகன் எடுத்த விபரீத முடிவு - Chennai News

குன்றத்தூரில் பெற்றோர் சண்டையிட்டு கொண்டதால் மனமுடைந்த மகன் கத்தியால் தானே மார்பில் குத்தி கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பெற்றோர் சண்டை போட்டதில் ஆத்திரமடைந்த மகன் தற்கொலை!

author img

By

Published : Jan 19, 2023, 12:20 PM IST

சென்னை: குன்றத்தூர் அடுத்த மணிகண்டன் நகரின் இந்திரா காந்தி தெருவை சேர்ந்தவர் பிரபாகரன். இவர் கூலி வேலை செய்து வருகிறார். இவரது மகன் பாலகிருஷ்ணன்(19) குன்றத்தூர் அடுத்த கோவூரில் உள்ள தனியார் கல்லூரியில் பிகாம் 2 ஆம் ஆண்டு படித்து வந்தார். கடந்த சில தினங்களாக பிரபாகரன் வேலைக்கு செல்லாமல் தனது மனைவிடம் தகராறு செய்து கொண்டு இருந்துள்ளார்.

அதைத் தொடர்ந்து, இன்றும் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது பிரபாகரன் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து குத்தி கொள்ளப் போவதாக மிரட்டியுள்ளார். இந்த கத்தியை பிடுங்கிய மகன் பாலகிருஷ்ணன், உங்களது தொடர் சண்டையால் நிம்மதியாக இருக்க முடியவில்லை என்று கூறி உடனேயே தனது மார்பில் வேகமாக குத்திக் கொண்டுள்ளார். அதன்பின் அங்கேயே மயங்கமடைந்து ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார்.

இதைக்கண்டு பதறிப்போன அவரது பெற்றோர் பாலகிருஷ்ணனை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். மருத்துவமனையில் பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து குன்றத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பாலகிருஷ்ணனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: ஆளுநர் ஆர்.என். ரவி வேறு விதத்தில் வலியுறுத்துகிறார் - சு.வெங்கடேசன் எம்பி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.