தமிழ்நாடு மின்வாரியத்தில் மின்னியல் பிரிவில் 400, இயந்திரவியல் பிரிவில் 125, கட்டடவியல் பிரிவில் 75 என மொத்தம் 600 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது.
விண்ணப்பப்பதிவு கடந்த ஜனவரி 24ஆம் தேதி முதல் பிப்ரவரி 24 வரை நடைபெற்றுவந்தது. இருப்பினும், இது குறித்தான முறையான அறிவிப்பு இல்லாத காரணத்தினால் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி நீட்டிக்கச் செய்ய வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கோரிக்கைவைத்தனர்.
இதனைத் தொடர்ந்து, மின்வாரிய உதவியாளர் பணிக்கு விண்ணப்பிப்பதற்காக மார்ச் 16ஆம் தேதி வரையில் நீட்டிப்பு செய்து மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது.
தற்போது தமிழ் வழியில் கல்வி பயின்றவர்களின் கோரிக்கையைப் பரிசீலித்து அவர்களின் நலன்கருதி, இந்தத் தேர்வுகளைத் தமிழ் மொழியிலும் நடத்திட முடிவுசெய்து கணினி வழியில் விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்காக வருகிற 23ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு மின்வாரியத்தின் இணைய முகவரியை (www.tangedco.gov.in) அணுகலாம் எனத் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 'விரைவில் தூத்துக்குடியில் மாற்றுத்திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு முகாம்'