சென்னை பல்லாவரம் அடுத்த சிவசங்கரன் தெருவிலுள்ள ஒரு வீட்டின் மாடியில் சட்டவிரோத சூதாட்டம் நடைபெறுவதாக காவல் துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல் துறையினர், சட்டவிரோத சூதாட்டத்தில் ஈடுபட்ட இர்சாத் (56), சாமிதுரை (50), அரசன் (62), ஷரீப் (39), வசந்த குமார் (36), ராஜா (46), முருகன் (51), கைலாசநாதர் (44), தனசேகரன் (40), ரவிகுமார் (42), செந்தில்குமார் (42) ஆகிய 11 பேரை கைது செய்தனர்.
மேலும், அவர்களிடமிருந்து 3 ஆயிரம் ரூபாய் பணம், ஆறு சீட்டுக் கட்டுகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இதில், சூதாட்ட கிளப்பை நடத்தி வந்த மாரி (38) என்ற முக்கிய நபர் மட்டும் தலைமறைவாகியுள்ளார். அவரை பல்லாவரம் காவல் துறையினர் தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: தொடர்ந்து தலை தூக்கும் ஆன்லைன் மோசடி தற்கொலைகள்-தீர்வு கூறும் மனநல மருத்துவர் யாமினி