சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய தலைமை தேர்தல் அலுவலர் சத்யபிரத சாகு, ”நாங்குநேரி தொகுதியிலிருந்து எடுத்துச்செல்லப்பட்டதாகக் கூறப்படும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் தேர்தல் அலுவலர்களின் பயிற்சிக்காக பயன்படுத்துபவையாகும்.
விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலில் வாக்குப்பதிவிற்காக பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. மேலும் தேர்தலில் பயன்படுத்தப்பட உள்ள வாக்குப்பதிவு இயந்திரங்களின் வரிசை எண்கள் குறித்த விவரங்கள் அரசியல் கட்சியினருக்கு ஏற்கனவே தெரியப்படுத்தியுள்ளது.
இது குறித்து அரசியல் கட்சியினர் புகாரளிப்பதற்கு எதுவுமில்லை. தற்போது வரை 48 லட்சம் ரூபாய் உட்பட மொத்தம் 92 ரூபாய் மதிப்புள்ள தங்கம், வெள்ளி, மதுபாணங்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தேர்தல் பரப்புரையின்போது, ராஜீவ் காந்தி மரணம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய சீமான் மீது எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது” என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தார்.
இதையும் படிங்க:சீமான் பேசியது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தலைமைத் தேர்தல் அலுவலர் உத்தரவு!