சென்னை ஆயிரம் விளக்கு பகுதி ஹடோஸ் சாலையில் உள்ள அப்பார்ட்மெண்ட் ஒன்றில் தண்ணீருக்காக ஆழ்துளை கிணறு தோண்டுவதற்கான பணிகள் நேற்று நடைபெற்றது. இதற்காக விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த காண்ட்ராக்டர் மணிகண்டன் தலைமையில் நான்கு பேர் வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது, சக்திவேல் (20) என்பவர் கீழே செல்லக்கூடிய மின்சார வயரில் கால் வைத்ததில் அவர் மீது மின்சாரம் பாய்ந்தது. இதனால் அவர் மயங்கி கீழே விழுந்ததையடுத்து, அவருடன் வேலை செய்யக்கூடிய ராஜேந்திரன் என்பவர் அவரை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்.
![சக்திவேல்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-che-04-borewell-current-shock-dead-script-7202290_22082019153309_2208f_1566468189_519.jpg)
அங்கு சக்திவேலை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர். இது குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து அப்பார்ட்மெண்ட்டின் செயலாளர் உஷா, கண்ட்ராக்டர் மணிகண்டன் ஆகியோரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.