தமிழ்நாட்டில் வருகிற ஏப்ரல் 6ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் நிலையில், தொழில் நிமிர்தமாக பணிபுரிவோர், சொந்த ஊர் சென்று வாக்களிக்க வசதியாக 14,215 சிறப்பு பேருந்துகள் இன்று (ஏப்ரல் 1) முதல் 5ஆம் தேதி வரை இயக்கப்பட உள்ளது. ஆனால் இதற்கு பொதுமக்கள் போதிய ஆர்வம் காட்டவில்லை.
தற்போது ஒரு நாளைக்கு 1,000 முதல் 1,500 வரை மட்டுமே முன்பதிவு செய்துள்ளனர். கடந்த மக்களவை தேர்தலின் போது 40,000 பேர் முன்பதிவு செய்த நிலையில், தற்போது வரை 10,000 பேர் மட்டுமே முன்பதிவு செய்துள்ளனர். குறிப்பாக சொந்த வாகனங்களில் செல்ல மட்டுமே ஆர்வம் காட்டுகின்றனர்.
பெரும்பாலான கல்லூரிகளுக்கு ஏற்கனவே விடுமுறையில் தான் உள்ளனர். பள்ளி மாணவர்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளன. பெரும்பாலானோர் ஆன்லைன் வகுப்பில் இருப்பதாலும், ஐடி நிறுவனங்கள் வீட்டில் இருந்து வேலை செய்ய அனுமதி வழங்கி உள்ளதாலும் போதிய வரவேற்பு இல்லை என போக்குவரத்து துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: அமித் ஷா பரப்புரை: கூட்ட நெரிசலில் சிக்கி 5 பேர் காயம்