ETV Bharat / state

கரோனா பாதிப்பு: எட்டு சிறப்பு ரயில்கள் ரத்து! - சிறப்பு ரயில்கள் ரத்து

சென்னை: ரயில் பயணிகளின் வருகை குறைவின் காரணமாக எட்டு சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

எட்டு சிறப்பு ரயில்கள் ரத்து
எட்டு சிறப்பு ரயில்கள் ரத்து
author img

By

Published : May 12, 2021, 11:25 PM IST

கரோனா பரவல் காரணமாக, ரயில் பயணிகளின் வருகை குறைவாக இருப்பதால், தமிழ்நாட்டில் இயக்கப்படும் எட்டு சிறப்பு ரயில்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. அதேநேரத்தில், வட மாநிலத்திற்குச் செல்லும் பயணிகளின் கூட்டம் அதிகரித்துள்ளதால் அகர்தலா - கன்னியாகுமரி உள்ளிட்ட மூன்று புதிய சிறப்பு ரயில்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக, ஏற்கெனவே இயங்கும் சிறப்பு ரயில்களில் பெட்டிகள் அதிகப்படுத்தப்பட்டுள்ளன.

யஷ்வந்த்பூர் - தனபூர் இடையே செல்லும் ஒரு வழி அதிவிரைவு கோடைகால சிறப்பு ரயில், அகர்தலா - கன்னியாகுமரி இடையே ஒரு வழி சிறப்பு ரயிலாக இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் சேவை வரும் மே 19ஆம் தேதி முதல் தொடங்குகிறது. அகர்தலாவிலிருந்து கிளம்பும் ரயில் நான்காவது நாள் இரவு 10 மணிக்கு கன்னியாகுமரி வந்தடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், திருவனந்தபுரம் - ஷாலிமார் வாரம் இருமுறை சிறப்பு ரயிலில் பயணிகள் கூட்டம் அதிகரித்ததைத் தொடர்ந்து, அதில் மேலும் இரண்டு படுக்கை வசதி கொண்ட பெட்டிகள், ஒரு பொது பெட்டி என மூன்று பெட்டிகள் இணைக்கப்படும் எனத் தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. மே 13ஆம் தேதி முதல் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென்னக ரயில்வே அறிவித்தபடி மயிலாடுதுறை - கோவை சிறப்பு ரயில், கோவை - மயிலாடுதுறை சிறப்பு ரயில், எம்ஜிஆர் சென்ட்ரல் முதல் மங்களூரு சென்ட்ரல் வரை செல்லும் சிறப்பு ரயில், மங்களூரு சென்ட்ரல் முதல் எம்ஜிஆர் சென்ட்ரல் வரை செல்லும் சிறப்பு ரயில், நாகர்கோவில் - கோவை நாள்தோறும் செல்லும் சிறப்பு ரயில், கோவை - நாகர்கோவில் நாள்தோறும் செல்லும் சிறப்பு ரயில், கோவை - மங்களூரு சென்ட்ரல் நாள்தோறும் செல்லும் சிறப்பு ரயில், மங்களூரு சென்ட்ரல் - கோவை நாள்தோறும் செல்லும் சிறப்பு ரயில் ஆகியவை வரும் மே 14ஆம் தேதி முதல் மே 31ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.