சென்னை: சென்னையில் பல்வேறு இடங்களில் இன்று (ஆக. 24) நில அதிர்வு ஏற்பட்டது. இதனை தேசிய நில அதிர்வு கண்காணிப்பு மையம் உறுதிசெய்தது.
சென்னையிலிருந்து வடகிழக்கில் 320 கி.மீ. தொலையில் வங்கக்கடலில் 10 கி.மீ ஆழத்தில் நில அதிர்வு ஏற்பட்டது.
ஆழ்வார்பேட்டை, அடையாறு, கோட்டூர்புரம், நுங்கம்பாக்கம் ஆகிய இடங்களில் நில அதிர்வு ஏற்பட்டது.
ரிக்டர் அளவு - 5.1 magnitude
வங்கக்கடலில் காக்கிநாடா அருகே 10 கிலோ மீட்டர் ஆழத்தில், இன்று (ஆக. 24) நண்பகல் 12:35:50 மணிக்கு நில அதிர்வு ஏற்பட்டது.
ரிக்டர் அளவுகோலில் இது 5.1 magnitudeஆக பதிவாகியுள்ளது. சென்னையில் அண்ணா சாலை, நுங்கம்பாக்கம், போரூர் உள்பட சில இடங்களில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது.
மேலும், இதுகுறித்து சென்னையில் உள்ள வானிலை மைய இயக்குநர் புவியரசன், நம்மிடம் தெரிவிக்கும் போது, "இந்த நில அதிர்வு வங்கக் கடலுக்கடியில் ஏற்பட்டுள்ளது.
மேலும், ஆந்திரா முதல் சென்னை உள்ளிட்ட இடங்கள் அனைத்தும் ஒரே புவி தட்டையான பரப்பளவு கொண்டுள்ளது. இந்த நில அதிர்வால் பாதிப்பு என்பது எல்லாப் பகுதிகளிலும் ஒரே மாதிரியாக இருக்கும்.
எந்தப் பகுதியில் பாதிப்பு அதிகமாக உள்ளது என்று புவியியல் ஆய்வாளரிடம் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும். மேலும், இந்தப் பாதிப்பு குறித்து அமெரிக்கா உள்ளிட்ட வானிலை மையங்கள், அட்ச ரேகை, தீர்க்க ரேகை கொண்டு ஆய்வு மேற்கொண்டு வருகின்றன.
இந்த நில அதிர்வால் எந்தப் பகுதிகளிலும் பாதிப்பு இல்லை" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: 'நவீன தமிழ்நாட்டை வடிவமைக்க திருக்குவளையிலிருந்து கிளம்பிய இளைஞர்'