ETV Bharat / state

இடைத்தேர்தல் பணியால் காத்தாடும் தலைமைச் செயலகம் - ஏமாற்றத்தில் மக்கள்

சென்னை: விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல் பரப்புரையில் முதலமைச்சர், துணை முதலமைச்சர், அமைச்சர்கள் ஆகியோர் ஈடுபட்டுள்ளதால் தமிழ்நாடு தலைமைச் செயலகம் ஆட்கள் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது.

secretariat
author img

By

Published : Oct 15, 2019, 7:34 PM IST

Updated : Oct 15, 2019, 8:46 PM IST

தமிழ்நாட்டில் காலியாக உள்ள விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வரும் 21ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த இடைத்தேர்தல் 2021ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னோட்டமாக பார்க்கப்படுகிறது.

இதனால் இரண்டு தொகுதிகளையும் வென்று மக்களிடம் தங்களுக்கு இன்னும் ஆதரவு உள்ளது என்று காட்ட அதிமுகவும், தேர்தலில் வெற்றி பெற்று தங்கள் பலத்தை நிரூபிக்க திமுகவும் வேட்டியை மடித்து கட்டி களத்தில் குதித்துள்ளன. அதிமுக சார்பில் வேட்பாளர்கள் இறுதி செய்யப்பட்டவுடன் தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர்.

அதிமுக தலைவர்கள்
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உடன் அமைச்சர்கள்

இதில் விக்கிரவாண்டி தொகுதியில் பணியாற்ற அதிமுகவில் 28 மாவட்டங்களில் உள்ள தலைமைக் கழக நிர்வாகிகள், அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள், சட்டப்பேரவை, நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் விக்கிரவாண்டி தொகுதியில் தேர்தல் களப்பணியாற்ற வேண்டும் என அதிமுக தலைமை உத்தரவிட்டுள்ளது. இதேபோல், நாங்குநேரி தொகுதிக்கு அதிமுகவின் 27 மாவட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் தேர்தல் களப்பணியாற்றிவருகின்றனர்.

இந்த பரப்புரையில் முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் ஆகியோர் ஈடுபட்டனர். சீன அதிபர் ஜி ஜின்பிங் - பிரதமர் மோடி ஆகியோரின் சந்திப்பு கடந்த 11, 12ஆம் தேதிகளில் நடைபெற்றதால், முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் தேர்தல் பரப்புரைக்குச் செல்ல முடியவில்லை.

எனினும் அமைச்சர்களே மாவட்டச் செயலாளர்களாக இருப்பதால், அவர்கள் இரண்டு வாரத்துக்கு முன்பாகவே தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் முகாமிட்டு வீதி வீதியாகச் சென்று தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். அதைத் தொடர்ந்து தற்போது முதலமைச்சர், துணை முதலமைச்சர் ஆகியோர் மீண்டும் பரப்புரையில் களமிறங்கியுள்ளனர்

இதனால் சென்னையில் உள்ள தலைமைச் செயலக கட்டடம் வெறிச்சோடி காணப்படுகிறது. அங்கு தினந்தோறும் முதலமைச்சர், துணை முதலமைச்சர், அமைச்சர்கள் ஆகியோர் வரும் வேளையில் பொதுமக்கள், அதிமுக தொண்டர்கள் கூட்டம் அலைமோதும்.

பொதுமக்கள் தங்கள் பிரச்னைகளை தீர்க்க வேண்டி அமைச்சர்களிடம் மனு அளிப்பதற்காக காலை முதல் மாலை வரை முகாமிட்டு இருப்பார்கள். ஆனால் கடந்த இரண்டு வாரங்களுக்கு மேலாகவே முதலமைச்சர், துணை முதலமைச்சர், அமைச்சர்கள் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ளதால் தலைமைச் செயலகம் வெறிச்சோடி காணப்படுகிறது.

தங்களது பிரச்னையை தீர்ப்பதற்காக அமைச்சர்களிடம் மனு கொடுக்க தலைமைச் செயலகம் வரும் பொதுமக்கள், அங்கு யாரும் இல்லாததால், செய்வதறியாது திகைத்து ஏமாற்றத்துடன் திரும்பி செல்லும் காட்சிகளே தினமும் அரங்கேறி வருகின்றன.

இதையும் படிங்க: வெளிநாட்டு பயணத்தை விமர்சிப்பது சரியல்ல - எடப்பாடி பழனிசாமி

Intro:Body:சென்னை / வி.டி. விஜய்/ சிறப்பு செய்தி

'காத்தாடுது கோட்டை'

முதல்வர், துணை முதல்வர் மற்றும் அமைச்சர்கள் விரைவில் நடக்க உள்ள விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி இடை தேர்தல் பிரச்சாரத்தில் மும்முரமாக இருப்பதால் ஆளரவமின்றி தலைமை செயலகம் வெறிச்சோடி காணப்படுகிறது.

தலைமை தேர்தல் கமிஷனர் சுனில் அரோரா கடந்த செப்டம்பர் மாதம் 21 ஆம் தேதி டெல்லியில் பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேசினார். அப்போது தமிழகத்தில் காலியாக உள்ள விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்கு பதிவு அக்டொபர் மாதம் 21 நடக்கும் என்றும், 24 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கும் என்று தெரிவித்தார். மேலும் இதற்கான வேட்பு மனு தாக்கல் செப்டம்பர் மாதம் 23 ஆம் தேதி தொடங்கும் என்றும் அறிவிப்பு வெளியிட்டார்.

இந்த இடைத்தேர்தல் 2021 ஆம் ஆண்டு வரவுள்ள சட்டமன்ற தேர்தலுக்கு முன்னோட்டமாக பார்க்கப்படுகிறது. இதனால் இரண்டு தொகுதிகளையும் வென்று மக்களிடம் தங்களுக்கு இன்னும் ஆதரவு உள்ளது என்று காட்ட அதிமுகவும், 2 இடங்களையும் வென்று தங்கள் பலத்தை நிரூபிக்க திமுகவும் வேட்டியை மடித்து கட்டி களத்தில் குதித்து உள்ளன. அதிமுக சார்பில் வேட்பாளர்கள் இறுதி செய்யப்பட்ட உடன் தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர். இதில் விக்கிரவாண்டி தொகுதியில் தேர்தல் பணியாற்ற அதிமுகவில் உள்ள 28 மாவட்டங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளன. இந்த 28 மாவட்டங்களில் உள்ள தலைமை கழக நிர்வாகிகள், அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள்,சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் விக்கிரவாண்டி தொகுதியில் தேர்தல் களப்பணியாற்ற வேண்டும் என அதிமுக தலைமை உத்தரவிட்டுள்ளது. இதேபோல், நாங்குநேரி தொகுதிக்கு அதிமுகவின் 27 மாவட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் தேர்தல் களப்பணியாற்றி வருகின்றனர்.

முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர் செல்வம் ஆகியோர் நேற்று முதல் தான் பிரச்சாரத்தில் களமிறங்கினர். சீன அதிபர் ஜி ஜின்பிங் - பிரதமர் மோடி சந்திப்பு கடந்த 11, 12 ஆம் தேதிகளில் நடந்ததால் அவர்களால் முன்கூட்டியே பிரச்சாரத்துக்கு செல்ல முடியவில்லை. ஆனால் அமைச்சர்களே மாவட்ட செயலாளர்களாக இருப்பதால், அவர்கள் இரண்டு வாரத்துக்கு முன்பாகவே தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் முகாமிட்டனர். வீதி வீதியாக சென்று தங்களுக்கு ஒதுக்கப்பட்ட கட்சி பணிகளில் கண்ணும் கருத்துமாக இருந்து வருகின்றனர். பிரதமரை வரவேற்க மட்டும் சில அமைச்சர்கள் சென்னை விமான நிலையம் வந்திருந்தனர். பின்னர் மீண்டும் இடைத்தேர்தல் பிரச்சாரத்துக்கு சென்று விட்டனர்.

முதல்வர், துணை முதல்வர் மற்றும் அமைச்சர்கள் தலைமை செயலகத்துக்கு வரும்போது பொதுமக்கள்,அதிமுக தொண்டர்கள் கூட்டம் அலைமோதும். பொதுமக்கள் தங்களது பிரச்சனைகளை தீர்க்க அமைச்சர்களிடம் மனு கொடுக்க தினமும் தலைமை செயலகம் வருவார்கள். காலை 9:30மணி முதல் மாலை வரை பொதுமக்கள் அமைச்சர்களை பார்க்க கையில் மனு பேப்பரும், கையுமாக தலைமை செயலகத்திலேயே முகாமிட்டு இருப்பார்கள். ஆனால் கடந்த 2 வாரங்களுக்கு மேலாகவே முதல்வர், துணை முதல்வர் மற்றும் அமைச்சர்கள் வரவின்றி தலைமை செயலகம் வெறிச்சோடி காணப்படுகிறது. தங்களது பிரச்சினையை தீர்ப்பதற்காக அமைச்சர்களிடம் மனு கொடுக்க தலைமை செயலகம் வரும் பொதுமக்கள், இங்கு யாரும் இல்லாததால், செய்வதறியாது திகைத்து ஏமாற்றத்துடன் திரும்பி செல்லும் காட்சிகளே தினமும் அரங்கேறி வருகின்றன. Conclusion:
Last Updated : Oct 15, 2019, 8:46 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.