ETV Bharat / state

Weather Update: தமிழ்நாட்டில் அடுத்த 4 நாட்களுக்கு வறண்ட வானிலை! - Weather Update in tn

Weather Update: தமிழ்நாட்டில் அடுத்த 4 நாட்களுக்கு வறண்ட வானிலைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் அடுத்த 4 நாட்களுக்கு வறண்ட வானிலை!

author img

By

Published : Jan 14, 2023, 3:37 PM IST

Weather Update: சென்னை: இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 'தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்றும்(ஜன.14), நாளையும்(ஜன.15) வறண்ட வானிலை நிலவக்கூடும். உள் மாவட்டங்களில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அளவில் குறைவாக இருக்கக்கூடும்.

ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது. நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் இரவு நேரங்களில் ஓரிரு இடங்களில் உறை பனிக்கு வாய்ப்புள்ளது. தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஜன.16ஆம் தேதி முதல் ஜன.18ஆம் தேதி வரை இருக்கும் வறண்ட வானிலையே நிலவக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு: அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 20-21 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். காலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும். கடலுக்குச் செல்லும் மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதுமில்லை’ எனத் தெரிவிக்கப்படுகிறது.

இதையும் படிங்க:கிராமத்தை சிறைபிடித்த யானைக் கூட்டம்: மக்கள் வெளியே வரவேண்டாம் என எச்சரிக்கை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.