ETV Bharat / state

தமிழ்நாட்டில் அடுத்த 4 நாட்களுக்கு வறண்ட வானிலை - chennai weather forecast

தமிழ்நாட்டில் அடுத்த 4 நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் அடுத்த 4 நாட்களுக்கு வறண்ட வானிலை

author img

By

Published : Feb 14, 2023, 2:54 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் அதிகரித்துவருவதைத் தொடர்ந்து அடுத்த 4 நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், "தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்றும்(பிப்.14), நாளையும்(பிப்.15) வறண்ட வானிலை நிலவக்கூடும்.

ஓரிரு இடங்களில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் குறைவாக இருக்கக்கூடும். அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பிப்.16ஆம் தேதி முதல் பிப்.18ஆம் தேதி வரை வறண்ட வானிலை நிலவக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு: அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 32-33 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 20-21 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு ஏதுமில்லை எனவும் கடலுக்கு செல்லும் மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதுமில்லை" எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது உள்ள வெப்பநிலையில் அதிகபட்சமாக வெப்பநிலையாக ஈரோட்டில் 37.2 டிகிரி செல்சியஸ், சேலத்தில் 36.6 டிகிரி செல்சியஸ், கரூர் பரமத்தியில் 36 டிகிரி செல்சியஸ் ஆக உள்ளது. தற்போது உள்ள வெப்பநிலையில் குறைந்த வெப்பநிலையாக கொடைக்கானலில் 17.9 டிகிரி செல்சியஸ், உதகமண்டலத்தில் 24.1 டிகிரி செல்சியஸ், காரைக்காலில் 29.4 டிகிரி செல்சியஸ் ஆக உள்ளது.

வறண்ட வானிலை குறித்து விளக்கிய சென்னை வானிலை ஆய்வு மையம், "இன்னும் ஓரிரு நாட்களில் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து பனியின் தாக்கம் குறையும். பகல் நேரங்களில் முன்பை விட வெப்பத்தின் தாக்கம் அதிகளவில் காணப்படுகிறது. இரவு நேரங்களில் காற்றின் வேகம் குறைவாக காணப்படுகிறது. இனிவரும் காலங்களில் இரவு நேரங்களில் காற்றின் வேகம் அதிகரித்து காணப்படும். அதன் மூலம் பனியின் தாக்கம் குறைய வாய்ப்புள்ளது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: நிலநடுக்கத்தை முன்கூட்டியே கணிக்க முடியாது - பாலச்சந்திரன்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.