ETV Bharat / state

மருத்துவர் மீது கொலை முயற்சி புகார் - விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றம் - சிபிசிஐடி விசாரணை

சென்னை தனியார் கருத்தரிப்பு மைய உரிமையாளர் மருத்துவர் தாமஸ் மீதான கொலை முயற்சி புகார்களின் உண்மைத்தன்மையை கண்டறிவதற்காக வழக்குகளின் விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Nov 14, 2022, 4:38 PM IST

சென்னையில் உள்ள தனியார் கருத்தரிப்பு மையத்தில் பணியாற்றி வந்தவர், மருத்துவர் ரம்யா. பின்னர், அங்கிருந்து விலகி, தனியாக மருத்துவமனை தொடங்கியுள்ளார். இந்நிலையில், தனியாக மருத்துவமனை தொடங்கியதற்காக, மருத்துவர் தாமஸ் என்பவர் கூலிப்படையை ஏவி, தன்னை கொல்ல முயற்சித்ததாக அவர் புகார் அளித்தார்.

புகாரின் அடிப்படையில் மருத்துவர் தாமஸ் மீது செம்பியம் காவல் துறையினர் 2017ஆம் ஆண்டு இரு வழக்குகளைப் பதிவு செய்தனர். இந்நிலையில், முதல் வழக்கு தொடர்பாக மகளிர் சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, தனக்கு எதிராக குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டதை எதிர்த்தும், இரண்டாவது வழக்கை ரத்து செய்யக்கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன், வழக்குத்தொடர்பான ஆவணங்களை ஆராய்ந்ததில் விசாரணை நியாயமாக நடைபெறவில்லை எனத் தெரிய வருவதால், இரு புகார்களின் உண்மைத் தன்மையை கண்டறிய, இரு வழக்குகளின் விசாரணையையும் சிபிசிஐடிக்கு மாற்றி உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: கள்ளக்குறிச்சி வழக்கு...குண்டர் சட்டத்தில் கைதானவரை விடுவிக்க கோரி மனு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.