ETV Bharat / state

பட்டியலின மருத்துவர் தரக்குறைவாக பேசபட்ட விவகாரத்தில் தொடர்பில்லை - அமைச்சர் செந்தில் பாலாஜி - corona work

பட்டியலின மருத்துவரை தரக்குறைவாக பேசிய விவகாரத்தில் தனக்கு தொடர்பு இல்லை என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்ததாக டாக்டர்கள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் ரவீந்தரநாத் கூறியுள்ளார்.

அமைச்சர் செந்தில் பாலாஜி
அமைச்சர் செந்தில் பாலாஜி
author img

By

Published : Jun 7, 2021, 9:15 PM IST

Updated : Jun 7, 2021, 9:28 PM IST

சென்னை: இது குறித்து அவர் கூறியதாவது, “அமைச்சர் செந்தில் பாலாஜி தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டார். கடலூர் மாவட்டம் வாண்டையார் இருப்பு ஆரம்ப சுகாதார நிலையம் தொடர்பான பிரச்னையில் நான் தலையிடவில்லை எனக் கூறினார். அவரது பெயரை இதில் தொடர்பு படுத்தியமைக்காக வருத்தத்தை தெரிவித்தார்.

அமைச்சர் மீது சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்திற்கு தனிப்பட்ட முறையில் எந்த பிரச்னையும் இல்லை. மிகவும் சுறுசுறுப்பாக செயல்படும் அவர் மீது மிகுந்த மரியாதை உண்டு. அமைச்சரிடம் நானும் எனது வருத்தத்தை தெரிவித்தேன். மருத்துவர்களிடையே ஏற்பட்ட பிரச்னை தொடர்பாக அரசு, நேர்மையான முழுமையான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். சிறையில் உள்ள மருத்துவரை உடனடியாக விடுவிக்க வேண்டும். அவரை கைது செய்ய காரணமாக இருந்த நபர்கள் யார் என்பது குறித்தும் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.

மருத்துவர்களிடையே ஏற்பட்ட பிரச்னைக்கு அடிப்படைக் காரணம் கரோனா தொற்று பணிச்சுமை என தெரிகிறது. தொடர்ந்து விடுப்பின்றி இடைவிடாது கரோனா பணியில் மருத்துவர்களை ஈடுபடுத்துவதால் ஏற்படும் கடும் மன அழுத்தம் காரணமாக உருவாகும் முரண்பாடுகள் பல்வேறு வடிவங்களை எடுத்து வருகிறது. அவர்களிடையேயான நல்லிணக்கத்தை சீர்குலைத்து வருகிறது. கரோனா தொற்று பணி வழங்குவதில் சாதியப் பாகுபாடு், பாரபட்சம் நிலவுகிறது.

எனவே, இப்பிரச்னைகளுககு தமிழ்நாடு அரசு உடனடியாக தீர்வு காண வேண்டும். போதிய செவிலியர்களும், மருத்துவப் பணியாளர்களும் இல்லாததும், மருத்துவர்களுக்கும் அலுவலர்களுக்கும் இடையே பிரச்னைகளை உருவாக்குகிறது.

அண்மையில் வட மாநிலம் ஒன்றில் ஒரு செவிலியர், மருத்துவரை கன்னத்தில் அறைந்ததும், பதிலுக்கு மருத்துவர் செவிலியரை தாக்க முயன்றதையும், தொலைக்காட்சிகள் மூலம் அறிந்தோம். அந்நிகழ்விற்கு பணிச்சுமையே காரணம் என்று கூறப்பட்டது. மருத்துவர்களிடேயே ஏற்பட்ட பிரச்னையை, மருத்துவத் துறை அலுவலர்கலையும் வைத்துக் கொண்டு பேசித் தீர்ப்பதற்கு முயலாமல், பட்டியலின மருத்துவரை மட்டும் கைது செய்து சிறையில் அடைத்தது, மருத்துவர்களிடையே வருத்தத்தை உருவாக்கி இருக்கிறது.

மருத்துவர்களிடையேயும், மருத்துவப் பணியாளர்களிடையேயும், நல்லிணக்கத்தை ஏற்படுத்த உரிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். மருத்துவத் துறையில் அதிகரித்து வரும் சாதியப் பிரச்னைகளுக்கு, பாகுபாடுகளுக்கு தீர்வு காண முயல வேண்டும்” என அதில் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: 'தனியார் மருத்துவமனைகளுக்கும் ரெம்டிசிவர் மருந்து' - மருத்துவர் சங்கம் வரவேற்பு

Last Updated : Jun 7, 2021, 9:28 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.