சென்னை அன்பகத்தில் பிப்ரவரி 14ஆம் தேதி நடைபெற்ற திமுக கூட்டத்தில் ஆர்.எஸ். பாரதி பட்டியலின மக்களை அவமதிக்கும்விதமாகப் பேசியதாக ஆதித்தமிழர் மக்கள் கட்சித் தலைவர் கல்யாண சுந்தரம் அளித்த புகாரின்பேரில் இன்று காலை அவர் கைதுசெய்யப்பட்டார்.
கைதுசெய்யப்படும்போது பேசிய அவர், "நான் பேசி நூறு நாள்கள் கடந்துவிட்டன. என்னைக் கைதுசெய்வதற்கு காரணம் நேற்று துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் செய்த ஊழல் ஒன்றைப் பற்றி லஞ்ச ஒழிப்புத் துறையினரிடம் புகார் அளித்தேன்.
அதுமட்டுமல்லாமல் கோவையில் கிருமிநாசினி, பிளிச்சிங் பவுடர் கொள்முதல்களில் ஊழல் நடைபெற்றுள்ளது.
அதன் அடிப்படையில் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மீது புகார் அளிக்க ஆதாரங்கள் தயார் செய்யப்பட்டுவந்தன. இந்த நிலையில் நான் கைதுசெய்யப்பட்டுள்ளேன்.
நான் சிறையில் அடைக்கப்பட்டாலும் எனது வழக்குரைஞர்கள் அப்புகார்களை அளிப்பார்கள்" எனத் தெரிவித்தார்
இதையும் படிங்க: தமிழ்நாடு முழுவதும் 28 நீதிபதிகள் இடமாற்றம்!