சென்னை: திமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கு.க.செல்வம் கடந்த 2016ல் நடந்த சட்டமன்ற தேர்தலில் ஆயிரம் விளக்கு சட்டமன்றத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். கடந்த 2020-ஆம் ஆண்டு பாஜகவின் பக்கம் சென்ற கு.க.செல்வத்திற்கு அங்கு முக்கியத்துவம் வழங்கப்படாததால் மீண்டும் திமுகவின் பக்கம் வந்தார்.
தற்போது திமுகவில் தலைமை நிலைய செயலாளர் பொறுப்பில் உள்ள இவர் உடல் நலக்குறைவால் போரூர் ராமச்சந்திர மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி காலமானார். அவரது மறைவுக்கு திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். அவருடன் துர்கா ஸ்டாலின், திமுக எம்.பி டி.ஆர்.பாலு உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
-
மாண்புமிகு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், உடல்நலக்குறைவால் காலமான சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் திரு.கு.க.செல்வம் அவர்களின் இல்லத்திற்கு நேரில் சென்று, அவரது உடலுக்கு மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தி, குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.#CMMKSTALIN | #TNDIPR |@mkstalin pic.twitter.com/1VDeG8v7Mq
— TN DIPR (@TNDIPRNEWS) January 3, 2024 " class="align-text-top noRightClick twitterSection" data="
">மாண்புமிகு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், உடல்நலக்குறைவால் காலமான சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் திரு.கு.க.செல்வம் அவர்களின் இல்லத்திற்கு நேரில் சென்று, அவரது உடலுக்கு மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தி, குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.#CMMKSTALIN | #TNDIPR |@mkstalin pic.twitter.com/1VDeG8v7Mq
— TN DIPR (@TNDIPRNEWS) January 3, 2024மாண்புமிகு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், உடல்நலக்குறைவால் காலமான சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் திரு.கு.க.செல்வம் அவர்களின் இல்லத்திற்கு நேரில் சென்று, அவரது உடலுக்கு மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தி, குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.#CMMKSTALIN | #TNDIPR |@mkstalin pic.twitter.com/1VDeG8v7Mq
— TN DIPR (@TNDIPRNEWS) January 3, 2024
முன்னதாக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கு.க.செல்வம் வீட்டிற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தியதோடு அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.
-
தி.மு.கழக தலைமை நிலையச் செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான அண்ணன் கு.க.செல்வம் அவர்கள் உடல்நலக்குறைவால் மரணமடைந்த செய்தியறிந்து, அவருடைய இல்லத்துக்கு சென்று அண்ணனின் திருவுடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தோம்.
— Udhay (@Udhaystalin) January 3, 2024 " class="align-text-top noRightClick twitterSection" data="
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் அன்புத் தம்பியாகவும் -… pic.twitter.com/lgeX2560HJ
">தி.மு.கழக தலைமை நிலையச் செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான அண்ணன் கு.க.செல்வம் அவர்கள் உடல்நலக்குறைவால் மரணமடைந்த செய்தியறிந்து, அவருடைய இல்லத்துக்கு சென்று அண்ணனின் திருவுடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தோம்.
— Udhay (@Udhaystalin) January 3, 2024
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் அன்புத் தம்பியாகவும் -… pic.twitter.com/lgeX2560HJதி.மு.கழக தலைமை நிலையச் செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான அண்ணன் கு.க.செல்வம் அவர்கள் உடல்நலக்குறைவால் மரணமடைந்த செய்தியறிந்து, அவருடைய இல்லத்துக்கு சென்று அண்ணனின் திருவுடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தோம்.
— Udhay (@Udhaystalin) January 3, 2024
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் அன்புத் தம்பியாகவும் -… pic.twitter.com/lgeX2560HJ
இதையும் படிங்க: 3வது முறையாக ஜாமீன் கோரிய செந்தில் பாலாஜி.. அமலாக்கத்துறை பதிலளிக்க உத்தரவு!