ETV Bharat / state

விசிக பெண் கவுன்சிலரை கம்பியால் தாக்க வந்த திமுக நிர்வாகி; வீடியோ வைரல் - உயிருக்கு ஆபத்து

திமுக நிர்வாகியால் உயிருக்கு ஆபத்து இருப்பதாகக்கூறி விசிக பெண் கவுன்சிலர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

விசிக பெண் கவுன்சிலரை கம்பியால் தாக்க வந்த திமுக நிர்வாகி

author img

By

Published : Nov 3, 2022, 10:58 PM IST

சென்னை: மயிலாப்பூர் பகுதியைச்சேர்ந்தவர், சாந்தி என்கிற யாழினி. இவர் அசோக் நகர் 135ஆவது வார்டு கவுன்சிலராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு கடந்த 9 மாதங்களாகப்பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் நேற்று அசோக் நகர் பகுதிக்கு உட்பட்ட பி.டி.சி குடியிருப்பில் மழை நீர் அகற்றும் பணி மற்றும் கழிவுநீர் அகற்றும் பணியில் மாநகராட்சி அதிகாரியுடன் இணைந்து செயல்பட்டுக்கொண்டிருந்தார்.

அப்போது அந்த பகுதிக்கு வந்த திமுக நிர்வாகி செல்வகுமார் மற்றும் அவரது உறவினரும், திமுக நிர்வாகியுமான மணி என்கிற சுப்பிரமணி இருவரும் சேர்ந்து சாந்தியிடம் தகராறில் ஈடுபட்டு, பெண் கவுன்சிலர் உடன் வந்திருந்த உதவியாளர்களை இரும்புக்கம்பியால் தாக்கியுள்ளனர்.

மேலும் பெண் கவுன்சிலரான சாந்தியை கம்பியால் தாக்க முயற்சி செய்தது தொடர்பான வீடியோக்கள் சமூக அலுவலகத்தில் வைரலானது. இதுதொடர்பாக பெண் கவுன்சிலர் சாந்தி கே.கே. நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் கவுன்சிலராகப்பொறுப்பேற்றது முதலே மணி தன்னிடம் வீண் தகராறில் ஈடுபடுவதாகவும், குறிப்பாக அவரது மகளுக்கு அந்த வார்டு கவுன்சிலர் பதவி எனக் கூறியிருந்த நிலையில், கூட்டணி கட்சியில் விசிகவிற்கு ஒதுக்கப்பட்டு தான் வெற்றி பெற்று பணியாற்றி வருவதாகவும் தெரிவித்தார்.

விசிக பெண் கவுன்சிலரை கம்பியால் தாக்க வந்த திமுக நிர்வாகி

மேலும் வெற்றிபெற்ற உடனேயே சாந்தியை, மணி அவரது கட்சி அலுவலகத்திற்கு நேரில் அழைத்து வார்டு கவுன்சிலர் அலுவலக சாவியை தன்னிடம் ஒப்படைத்துவிட்டு மயிலாப்பூரிலேயே இருக்க வேண்டும் எனவும்; தான் சொல்லும் நபர்களுக்கு மட்டுமே பணிகளை வழங்க வேண்டும் எனவும், தான் சொல்லும் நபர்களுக்கு போன் செய்து பேச வேண்டும் எனவும் வற்புறுத்தியதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும் கூட்டணி கட்சி என்கிற அடிப்படையில் அந்த பகுதியில் இருக்கக்கூடிய மற்ற திமுக நிர்வாகிகள் தன்னுடன் இணக்கமாகப் பணியாற்றி வருகின்றனர்.

மணி மற்றும் செல்வகுமார், அவரது உறவினர்கள் மட்டுமே தொடர்ந்து தன்னிடம் பிரச்சனையில் ஈடுபட்டு வருவதாகவும் குற்றம் சாட்டிய அவர், இவர்களால் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும், முதலமைச்சர் இதில் தலையிட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளார்.

இதையும் படிங்க: மழை காரணமாக குறைந்த பயணிகளின் எண்ணிக்கை - மதுரை, கோவை விமானங்கள் ரத்து

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.