ETV Bharat / state

'அதிமுக அரசின் கிளைமேக்ஸ் 2021 தேர்லில் தெரியும்' - உதயநிதி ஸ்டாலின் - DMK Stalin Birthday

சென்னை: அதிமுக அரசின் கிளைமேக்ஸ் 2021 சட்டப்பேரவைத் தேர்லின்போது தெரியும் என திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார்.

dmk_employment camp speech by udhyanithi Stalin

author img

By

Published : Mar 1, 2020, 8:10 PM IST

Updated : Mar 1, 2020, 11:58 PM IST

திமுக தலைவர் ஸ்டாலின் 68ஆவது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை சைதாப்பேட்டையில் உள்ள அன்னை வேளாங்கண்ணி கலைக் கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. இதில் 100க்கும் அதிகமான மாணவர்களுக்கு திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பணி ஆணையை வழங்கினார். இதில் தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், சட்டப்பேரவை உறுப்பினர் ம. சுப்பிரமணியன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

அன்னை வேளாங்கண்ணி கலை கல்லூரியில் நடந்த வேலைவாய்ப்பு முகாம்
அன்னை வேளாங்கண்ணி கலைக் கல்லூரியில் நடந்த வேலைவாய்ப்பு முகாம்

அப்போது உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், ''திமுக தலைவர் ஸ்டாலின் தனது பிறந்தநாளில் எந்தக் கொண்டாட்டமும் இருக்கக் கூடாது என தெரிவித்துள்ளார். ஆனால் அவரது பிறந்தநாளில் நலத்திட்ட உதவிகள் வழங்கி நாம் மக்கள் பணி செய்துவருகிறோம். வேலைவாய்ப்புகள் உருவாக்க வேண்டிய ஆளும் கட்சியின் பணிகளை எதிர்க்கட்சியான நாம் செய்துவருகிறோம். மக்களுக்கான அரசு என்றால் அது திமுக அரசு தான். அதன் ஆட்சி விரைவில் அமையப்போவது உறுதி.

சரியாகச் சொல்ல வேண்டுமென்றால் இன்னும் 12 மாத காலம்தான். திமுக தலைவர் ஸ்டாலின் சொன்னதுபோல் உள்ளாட்சித் தேர்தல் வெற்றி வெறும் இண்ட்ரவல் (interval) தான். இதன் கிளைமேக்ஸ் 2021 சட்டப்பேரவைத் தேர்தலின்போது தெரியவரும்.

உதயநிதி ஸ்டாலின் பேச்சு

தமிழ்நாட்டில் டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளது. இதை முதலில் எதிர்த்துக் குரல் கொடுத்தது ஸ்டாலின்தான். டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடுகளை விசாரிப்பதற்கு சிபிஐ விசாரணைக்கு உத்திரவிட வேண்டும்'' என்றார்.

இதையும் படிங்க: தாத்தாவின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடிக்க மாட்டேன் - உதயநிதி ஸ்டாலின்

Last Updated : Mar 1, 2020, 11:58 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.